நமது கணினியில் இயங்குதளத்தை Reinstall செய்யும் போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கும். Device Drivers ஐ எங்காவது தொலைத்து இருப்போம். CD க்கள் பழுதாகி வேலை செய்யாமல் தொந்தரவு கொடுக்கும். இணையத்தில் சரியான Device Drivers க்காக தேடி அலைய வேண்டி இருக்கும். சில சமயங்களில் கிடைக்காமல் போகவும் வாய்ப்புண்டு. நமது ஹார்டுவேர் நிரந்தரமாக வேலை செய்யாமல் போகலாம்.
உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து ஹார்டுவேர் பொருட்களின் Device Driver களையும் நீங்கள் Backup எடுத்து வைத்து கொள்ள முடியும். அடுத்த முறை இயங்குதளத்தை Reinstall செய்யும் போது அந்த Backup ல் உள்ள அனைத்து Device Driver களையும் எளிதான முறையில் உபயோகித்து கொள்ள முடியும். Device Driver ருக்காக ஒவ்வொரு CD யாக தேடி அலைய வேண்டியதில்லை.
அந்த மென்பொருளின் பெயர் Double Driver . இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.
அதில் "Scan" பட்டனை அழுத்தினால் உங்கள் கணினியில் உள்ள ஹர்டுவேர்களுக்கான அனைத்து Device Driver களும் தோன்றும்.
Backup கிளிக் செய்து வேண்டிய இடத்தில் சேமித்து கொள்ளலாம்.Backup எடுத்து வைத்துள்ளவற்றை தேவைப்படும் போது Restore செய்ய விரும்பினால் Backup ல் dd.exe என்ற ஃபைல் இருக்கும்.அதனை ஓபன் செய்து Restore அழுத்தவும். அதில் தோன்றும் Device D river களில் தேவையானவற்றை நிறுவி கொள்ளவும்.
மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

கருத்துரையிடுக Facebook Disqus