1.உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம்
மனதை வலிமையாக்கும்

2.கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும்

3.நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.

4.திறமைதான் ஏழையின் மூலதனம்

5.பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும்.

6.பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து
முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான்

7.மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை

8.அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.

9.அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால்
அல்ல; விடாமுயற்சியால்தான்

10.
கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது

11.நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள் முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள்

12.துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது.

13.கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை!

14.எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும்

15.அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது.

16.ஒவ்வொரு நிமிடமும் நிமிடமும் நல்ல பண்புடன்
வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே,
இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம்

17.எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும்

18.நாளை நான் வாழ்வேன் என்கிறான் மூடன். இன்று என்பதும் காலம் கடந்ததே. அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர்

19.அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம் காலுக்கு செருப்பு!

20.அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும்


 
Top