1. DomainTools
வலைப்பதிவில் இருந்து இணையத்தளத்திற்கு மாற நினைப்பவர்கள், இணையத்தளத்திற்கான சிறந்த பெயரை இலகுவாக தேர்ந்தெடுப்பதற்கான உதவியை இந்த இலவச தளம் வழங்குகிறது. சிறந்த இணையத்தள பெயர்களுக்கான ஆலோசனை தருவதும் .com அல்லது .net எதை வாங்க முடியும் என்ற தகவல்களுடன் விரும்பினால் அங்கேயே டொமைனை வாங்கவும் முடியும்.
2. WhoisLookup/WhoisApplication
எந்த இணையத்தளங்கள் யாருடையது போன்ற விபரங்களை காட்டும் இரு சிறிய டூல் ஆகும். இதை டவுண்லோட் செய்தால் போதும் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை நேரடியாக கணனியில் இருந்து இயங்கக்கூடியது.
3. dnspchecker
சில இணையங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடங்கி விடும். தற்காலிகமாக செர்வர் செயலிழந்த தளங்களை அவை இயங்கக் தொடங்கிவிட்டனவா என ஒவ்வொரு முறையும் பரிசோதிப்பது நேர விரயமாகும் அதை தடுப்பதற்கு உதவும் சிறிய டூல் இதுவாகும். யூஆர் எல் ஐ வழங்கியதும் குறிப்பிட்ட தளத்தை தொடர்ச்சியாக பிங்க செய்து அவதானித்து அதன் தகவல்களை தர வல்லது.
4. BlogDesk
வேட்பிரஸ் அல்லது ஏனைய தளங்களை பதிவிடுவதற்கு பயன்படுத்துபவர்கள், தங்கள் கணனியின் டெஸ்டாப் இல் இருந்தே புளோக்கிங் செய்ய உதவும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் BlogDesk. பிரயாணம் செய்யும் போது இணைய வசதிகள் தடைப்படலாம் ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக பதிவிட வசதி செய்கிறது BlogDesk.
கருத்துரையிடுக Facebook Disqus