கணணி துறையில் புகழ்பெற்று விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியீடு இந்த பவர்பாய்ன்ட் மென்பொருள்.இந்த பவர்பாயின்டில் நாம் பல ஸ்லைடுகளை உருவாக்கி அதை மொத்தமாக ஓடவிட்டு பார்க்கும் போது அழகாக இருக்கும். இப்படி உருவாக்கும் பவர்பாய்ன்ட் கோப்புகளை வீடியோவாக மாற்ற ஒரு வழி உள்ளது. வீடியோவாக மாற்றினால் அந்த கோப்பை சீடியில் கொப்பி செய்து டிவியில் பார்க்கலாம். நம்முடைய மொபைல் போன்களில் பார்த்து மகிழலாம். யூடுப் போன்ற வீடியோ தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அந்த கோப்பை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். நிறுவியதும் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். 1. முதலில் New Task என்ற பட்டன் மீது க்ளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் உள்ள Add file(s) என்பதை க்ளிக் செய்யவும். 2. Add File(s) க்ளிக் செய்ததும் உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் வீடியோவாக மாற்றம் செய்ய விரும்பும் பவர்பாய்ன்ட் கோப்புகளை தேர்வு செய்யவும். (இதில் பல பைல்களை தேர்வு செய்து ஒரே வீடியோவாகவும் உருவாக்கி கொள்ளலாம்). 3. நீங்கள் கோப்பை தேர்வு செய்ததும் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அந்த விண்டோவில் நீங்கள் மாற்ற விரும்பும் வீடியோ வகையை(Format) தேர்வு செய்யவும். 4. குறிப்பிட்ட போர்மட் தேர்வு செய்தவுடன் உங்களுக்கு வரும் விண்டோவில் Convert என்ற பட்டனை க்ளிக் செய்யவும். இந்த பட்டனை அழுத்துவதற்கு முன் உங்கள் கணணியில் செயலில் வேறு ஏதேனும் மென்பொருள் இயங்கி கொண்டிருந்தால் அனைத்தையும் க்ளோஸ் செய்து விடவும். 5. அந்த Convert பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு வரும் எச்சரிக்கை செய்தி விண்டோவை OK கொடுத்தால் பவர்பாய்ன்ட் கோப்புகள் வீடியோவாக மாறத் தொடங்கும். மாற்றம் ஆகி முடிந்ததும் உங்களுக்கு அந்த வீடியோ கோப்புகள் ஓபன் ஆகும். அந்த வீடியோ கோப்பை இனி உங்களுக்கு தேவையான இடத்தில் உபயோகித்து கொள்ளலாம். தரவிறக்க சுட்டி |
Related Posts
நம் கைகளுக்குள் தவழும் ஸ்மார்ட்போன்களானது, அலாரம் - கைக்கடிகாரம் தொடங்கி டிஎஸ்எல்ஆர் கேமரா வரையிலாக அனைத்து இதர கேஜெட்களையும் விழுங்கி தன்னுள் ...Read more »
முதலில் எல்லாம் ஏதாவது ஒரு தகவல் வேண்டும் என்று கூகிளில் தேடினால் ஆங்கிலத்தில் மட்டுமே வரும், பின்பு படிப்படியாக தமிழ் உள்ளே புகுத்தப்பட்டு இப்போ...Read more »
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சவூதி அரேபியாவில் பிறந்துள்ள சாரா ஆப் (sarahah app) வைரலாக இந்தியளவில் டிரென்டிங்கில் உள்ள நிலையில் சாரா என்றா...Read more »
ஜீலை 16 முதல் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்னயிக்கப்படவுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோல...Read more »
தேர்வு முடிந்து குழந்தைகள் வீட்டில் விடுமுறையைக் கொண்டாட ஆரம்பிக்கும் நேரம் இது. காலை எழுந்தது முதல் சதா சர்வகாலமும் டிவி அல்லது போனில் கார்ட்டூன...Read more »
NameAsDate is a unique utility that let you add (and remove) any of the following options to files and folders context menu (right Click): ...Read more »
கருத்துரையிடுக Facebook Disqus