0

இணையத்தில் எதுதான் இல்லை! குழந்தை வளர்ப்பு குறித்து நிறைய தளங்கள் உள்ளன.
குழந்தை வளர்ப்பில் தனித் தனியாகத் தகவல் தரும் தளங்கள் உள்ளன. கூகுள்
தேடுதளம் மூலம் இவற்றை நீங்கள் காணலாம். இருப்பினும் நீங்கள் கேட்டதற்காக,
நான் கண்டவற்றில் சிறந்த ஒன்றைப் பற்றிக் கூறுகிறேன்.
அதன் முகவரி http://kidshealth.org/
இந்த தளம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெற்றோர், குழந்தை
மற்றும் இளம் வயது.முதல் பிரிவில் குழந்தை பிறப்பு மற்றும் வளர்ப்பு
குறித்து பல பிரிவுகள் உள்ளன. பொதுவான உடல்நலம், நோய் பற்றுதல்,
உணர்ச்சிகளும் செயல்பாடுகளும், வளர்ச்சியும் முன்னேற்றமும், சத்தான உணவு
மற்றும் நலம், கர்ப்ப காலம் மற்றும் புதிய பிறப்பு, மருத்துவ பிரச்னைகள்,
நல்ல பெற்றோர்கள், முதல் உதவி மற்றும் பாதுகாப்பு, மற்றும் செய்தி மற்றும்
தகவல்கள். இதில் தினந்தோறும் கேள்வி பதில் பிரிவுகளும் உள்ளன. அடுத்ததாக
சிறு குழந்தைகள் பிரிவில், அவர்கள் வளரும் ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப பல
பிரிவுகள் தரப்பட்டுள்ளன. உடல்நலத்தைப் பேணுவது, உணவு வகை, ஒவ்வொரு நாளும்
வரக்கூடிய உடல் நலப் பிரச்னைகள், மருத்துவ துறைக்கான சொற்கள், வளரும்
நிலையில் வரக் கூடிய நோய்கள் என்ற பிரிவுகளில் நிறைய தகவல்கள்
தரப்பட்டுள்ளன. இளம் வயது என்ற பிரிவில் எண்ணங்கள், உடல் போக்கு, நலமான
பாலியியல், சரியான உணவு, மருந்து மற்றும் ஆல்கஹால், நோய்கள், தொற்று
நோய்கள் மற்றும் சரியான பள்ளிகள் எனப் பல பிரிவுகளில் தகவல்கள்
கிடைக்கின்றன. பல தலைப்புகளில் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. குழந்தை
வளர்ப்பு பற்றி அறிய விரும்புவோருக்கான அருமையான தளம் இது.

கருத்துரையிடுக Disqus

 
Top