0
பாம்பினங்களிலேயே மிகவும் அழகிய நிறங்கொண்ட பாம்பு பறக்கும் பாம்பு ஆகும். உண்மையில் இது பறவைகள் போல் பறப்பதில்லை. ஆனால் உயர்ந்த மரக்கிளையிலிருந்து கீழே உள்ள கிளைக்கு காற்றில் எழும்பிச் செல்கிறது.மேலும், இவை ஒரு மரத்திலிருந்து பல மீற்றர் தொலைவில் உள்ள இன்னொரு மரத்திற்குத் தாவிக் குதிக்கும். மரங்களில் வாழும் இந்தப் பாம்பு மிக வேகமாக மரங்களிடையே தாவிச் செல்லக்கூடியது. ஏறத்தாழ ஒரு மீற்றர் நீளம் கொண்டு காணப்படும் இப்பாம்பின் உடல் கருப்பு நிறத்தில் இருக்கும்.
இவ்வாறு பல்வேறு வண்ணங்கள் நிறைந்த உடலைக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பு அணிகல மரப் பாம்பு என்றும் தங்க மரப் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு காணப்படும் பாம்புகளில் 50 அடி தூரத்திற்கு பறக்கும் பாம்பினைக் காணொளியில் காணலாம்.


கருத்துரையிடுக Disqus

 
Top