1
எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சோனி நிறுவனம் இந்தியாவில் புது வகையான வாட்ச்சை அறிமுக படுத்துகிறது. இதற்க்கு ஸ்மார்ட் வாட்ச் என பெயரிட்டுள்ளது.  ப்ளூடூத் தொழில்நுட்பத்தில் மூலம் இயங்கும்   இந்த வாட்ச்சில் பல பயனுள்ள வசதிகள் உள்ளது.
அட வாட்ச்ல என்னெங்க விசேஷம் இருக்கு எல்லா வாட்சும் டைம் தானே காட்ட போகுதுன்னு நினைக்கிறீர்களா, அதான் இல்லை இந்த வாட்சின் மூலம் பாட்டு கேட்கலாம், பேசலாம், SMS அனுப்பல, ஈமெயில் அனுப்பலாம், சமூக தளங்களை உபயோகிக்கலாம் மற்றும் இலவச ஆன்ட்ராய்டு மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கலாம்.

உதாரணமாக நீங்கள் பைக்கோ, காரோ ஓட்டி கொண்டிருக்கிறீர்கள். பின்பக்க சீட்டில் உள்ள பைக்குள் வைத்துள்ள மொபைலுக்கு ஏதேனும் SMS அல்லது Call அல்லது ஏதேனும் சமூக தள அப்டேட் வருகிறது என வைத்து கொள்வோம் அந்த செய்திகளை நீங்கள் அந்த போனை பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. நீங்கள் கையில் கட்டியிருக்கும் ஸ்மார்ட் வாட்ச் ப்ளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் அந்த தகவல்களை காட்டும்.  கீழே உள்ள இந்த வீடியோவை பாருங்கள்.


இந்த வாட்சின் விலை ரூபாய் 6,299 என நிர்ணயித்துள்ளது சோனி நிறுவனம். 123x123 pixels அளவுடைய இந்த வாட்ச் தொடுதிரை வசதியுடையது. புதிய தகவல்கள் வரும் பொழுது சிறியதாக வைப்ரேட் ஆகும் அதன் மூலம் புதிய தகவல் வந்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இதில் 65,536 நிறங்களை காண முடியும்.

கருத்துரையிடுக Disqus

 
Top