0
 
1.அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது.

2. இணைய இணைப்பின் வேகம் 8Mb/sec என்று சொன்னால், அது விநாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.

3.பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும்.

4.லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.
 
5.விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா? இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss) எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ஓ ரியர் (Charles O’Rear). கலிபோர்னியாவில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.

கருத்துரையிடுக Disqus

 
Top