0
 
மில்லியன் குவளைகள் பால் கறந்து ஒன்றோரியாவைச் சேர்ந்த ஸ்முர்ப் எனப் பெயர் கொண்ட பசு, வாழ்நாள் சாதனையாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
அதிகபால் கறந்து இந்த சாதனையை ஸ்முர்ப் படைத்துள்ளது. உலகத்திலேயே சிறந்த பசு என்ற பாராட்டும் பெற்றுள்ளது. இது வரையிலும் 216,893 கிலோக்ராம்கள் பாலைக் கொடுத்துள்ளதாம் ஸ்முர்ப்.
இதில் வியக்கத்தகு விடயம்  என்னவென்றால் பல ஆண்டுகளாக ஸ்முர்ப் இதே போன்று பாலைக் கொடுத்து வருவது தான். தற்போது இந்த  பசுவின் வயது 15.
பொதுவாக பிற பசுக்கள் இந்த வயதில் உயிருடன் இருப்பதில்லை. மனிதர்களுடன் ஒப்பிட்டுக் கூற வேண்டுமானால் தற்போது ஸ்முர்ப் 105 வயது மதிக்கத்தக்க வயது முதிர்ந்த பெண்மணிக்குச் சமமானவள்.
பிற பசுக்களை விட இரு மடங்கு அதிகமான வாழ்நாளிலும் வாழ்ந்து வருகிறது. ஆரம்பத்திலிருந்தே தினமும் பிற பசுக்கள் 35 லிட்டர் பால் கொடுத்து வந்த போது ஸ்முர்ப் 50 லிட்டர்களை வழங்கி வந்ததாகக் கூறுகிறார் இந்த பசுவின் உரிமையாளர் பேட்நுடே.

கருத்துரையிடுக Disqus

 
Top