ஒட்டவா:
மாறிவரும் நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகும் வேளையில்
நாணயங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் புதிய டிஜிட்டல் கரண்சியை (mintchip)
உருவாக்கியுள்ளது கனடாவின் ராயல் கனேடியன் மிண்ட் நிறுவனம்.
மிண்ட்சிப் (mint chip) குறித்த வீடியோவில் எப்படியெல்லாம் இந்த மிண்ட் சிப்பை உபயோகிக்கலாம் என்று விளக்கப்பட்டது. ‘மிண்ட் சிப்’ வடிவமைப்பு இன்னும் மெருகூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் கூறப்பட்டது. பணத்தை விட மிகவும் எளிதாக உபயோகிக்கும் விதமாகவும்; குழந்தைகள் கூட கஷ்டம் இல்லாமல் எளிதாக உபயோகிக்கும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மிண்ட் சிப்பில் பணத்திற்கு சமமான பதிப்பினை மைக்ரோ எஸ்.டி. அல்லது யு.எஸ்.பி. (Micri SD or USB) போன்ற சிப்பில் ஏற்றி ஒரு சிப்பில் இருந்து மற்றொரு சிப்பிற்கும் பணத்தை இடமாற்றம் செய்து (ஏற்றிக்)கொள்ளலாம். இந்த சிப் எந்த ஒரு வங்கியோடும் தொடர்பில் இருக்காது. அதே போல் அதற்கான மையப்படுத்தப்பட்ட தரவுத்தளம் (Centralized Database)எதுவும் இருக்காது.
ராயல் கனேடியன் மிண்ட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (Chief Financial Officer) மார்க் புரூல், சாஃப்ட்வேர் நிபுணர்களை இதற்கான ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்களை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில் முதல் பரிசு பெறுவோருக்கு 10 அவுன்ஸ் தங்க வேஃபர்கள் (டாலர் 17,000ற்கு சமமானது) வழங்கப்படும் என்றார்.
இதற்கு முன் வந்த ‘பிட்காயின்’ போன்று இதுவும் காணாமல் போகும் என்ற கருத்தினை புரூல் மறுத்துள்ளார்.

கருத்துரையிடுக Facebook Disqus