இது ஒரு ஹைபிரீடு வகை கார். இவ்வகை கார்களில், பேட்டரியில் இயங்கும் வகையிலும், பெட்ரோலில் ஓடும் வகையிலும், இரண்டு வசதிகளும் இடம் பெற்றிருக்கும். ஆனால், இந்த இரண்டு வசதிகளும் தனித்தனியாக செயல்படும். இந்த அம்சத்தை தான், பல்வேறு ஆய்வுகள் மூலம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. "டாடா மெஹாபிக்ஸல்' காரில் லித்தியம் அயன் பாஸ்போட் பேட்டரியும், ஒரு லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஜெனரேட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால், இந்த ஜெனரேட்டர் இயங்கி, பேட்டரியை தேவைப்படும் போது சார்ஜ் செய்யும்.
பொதுவாக, பேட்டரி கார்களை சார்ஜ் செய்ய, அதற்கான ஸ்டேஷன்களுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும். ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக, 50 முதல் 60 கி.மீ., வரையே செல்ல முடியும். ஆனால், "மெஹாபிக்ஸல்' காரில், பேட்டரியை சார்ஜ் செய்ய, அதற்கான ஸ்டேஷனை தேடிச் செல்ல வேண்டாம். அதில் பொருத்தப்பட்டுள்ள பெட்ரோல் இன்ஜின் ஜெனரேட்டரே அந்த பணியை செய்து விடும்.
இந்தியா போன்ற நாடுகளில், பேட்டரி கார்கள் எடுபடாமல் போனதற்கு, அதற்கான சார்ஜ் ஸ்டேஷன்கள் அதிகளவில் அமைக்கப்படாமல் இருப்பதே காரணம். இதற்கு அதிக செலவாகும். ஆனால், இப்போது இந்த பிரச்னைக்கு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீர்வு கண்டுள்ளது. இந்த காரை ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு, பேட்டரியை சார்ஜ் செய்தால், ஒரு கட்டத்தில் 900 கி.மீ., தூரம் வரை பயணிக்க முடியும். எனவே, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 கி.மீ., மைலேஜ் தரும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெனிவாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்த கார், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக Facebook Disqus