அசோலா என்பது மிதக்கும் பச்சிலைகள் கொண்ட ஒரு வகைச் செடி அல்லது பெரணியாகும்.இது கடற் பாசியைப் போன்றதேயாகும்.இதில் புரோட்டீன்,அமினோ அமிலம்,விட்டமின்கள் மற்றும் மினரல் போன்ற அணைத்து வகையான சத்துகளும் உள்ளது.
- தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது.
- பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம்.
- மிக மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.
- பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
- வேகமாக வளரும் தன்மை கொண்டவை.
இனப்பெருக்க முறை
பொதுவாக அசோலாவானது நெல் வயல்களில் அல்லது மிதமான தண்ணீர் உள்ள நிலைகளில் வளர்கிறது.சில இடங்களில் கான்க்ரீட் தொட்டிகளில் வளர்க்கின்றனர்
- அசோலா தயாரிப்பதற்கு முன்பு முதலில் களைகளை முழுமையாக அகற்ற வேண்டும்
- நிலத்தை சமப்படுத்த வேண்டும்
- 10cm நீளமுள்ள செங்கற்கல்லை நேராக ஒன்றன் மேல் ஒன்றாக செங்குத்தாக செவ்வக வடிவில் கட்ட வேண்டும்
- UV விளக்கில் வைத்து பாக்டீரியா முழுமையும் நீக்கி சுத்தம் செய்த சல்பானலைன் காகிததினை(2.5 x 1.8 mt size with 150 gm தடிமன்)சரிசமமாக செங்கலால் கட்டி வைத்த அமைப்பின் மீது விரிக்க வேண்டும்
- இதன் மீது 30-35kg நன்கு சளித்த மண்ணை சமமாக பரப்பி விடவும்.இது அசோலாவிற்கு முதன்மை சத்தாக இருக்கும்
- 4-5kg உள்ள 2நாளான பழைய மாட்டு சாணத்துடன் 15-20lit தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கும் போது கார்பன் மூலப்பொருள் உருவாகிறது.
- 40gms மேக்ரோ நியூட்ரியண்ட் கலவையை(10kg ராக் பாஸபேட்,1.5kgமெக்னீசியம் மற்றும் 20-50gm முரைட் பொட்டாஷ்)கார்பன் மூலப்பொருளுடன் கலந்து அசோலா படுக்கையில் போட வேண்டும்.இந்த கலவையை கலப்பது அசோலா படுக்கையில் போடுவதற்கு முன்பு செய்தால் போதும்.
- குழியில் 7-10cm அளவு தண்ணீர் இருக்க வேண்டும்.குளியலறையிலிருந்து வரும் தண்ணீர் அல்லது கால்நடைகள் பராமரிக்கும் அறையிலிருந்து வரும் தண்ணீர் மற்றும் துணி துவைத்து அலசிய 2வது தண்ணீர் என எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
- 1-1.5kg சுத்தமான செயற்கையாக உண்டாக்கப் பட்ட தாய்அசோலா விதையை தண்ணீர் மட்டத்திற்கு மேல் பரப்பி விடவேண்டும்.அதற்கு முன்பு ஏற்கனவே அதிலுள்ள மண் மற்றும் தண்ணீரை நன்கு கலக்கி விடவேண்டும்.நோய் தடுப்பு முறைகளை செய்த பிறகு,உடனடியாக தூய நீரினைத் தெளிக்க வேண்டும்
- ஒரே வாரத்தில் அசோலா படுக்கை முழுவதிலும் படர்ந்து வளர்ந்திருக்கும்
- 7வது நாளிலிருந்து தொடர்ந்து எல்லா நாட்களிலும் அறுவடை செய்யலாம்
- இதற்கு பிளாஸ்டிக் சல்லடை அல்லது அடியில் ஓட்டை உள்ள தட்டு பயன்படுத்தி அறுவடை செய்யலாம்
- மாட்டு சாணம்,தாது உப்புகளானது 7நாட்களுக்கு ஒரு முறை மாற்றி,மாற்றி கொடுக்கவும்
- அறுவடை செய்யப்பட்ட அசோலாவை நன்கு தண்ணீரால் கழுவி பயன்படுத்த வேண்டும்.அப்பொழுது தான் சாணத்தின் வாசனை போகும்
- மர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
- செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 2 மீ X 2 மீ அளவுள்ள தொட்டி போல் அமைத்து கொள்ளவேண்டும்.
- புல் மற்றும் மர வேர்களின் வளர்ச்சியை அசோலா குழியினில் தடுக்க தொட்டியின் கீழே உர சாக்கினை பரப்பி விட வேண்டும்
- அதன் மேல் சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பிவிட வேண்டும்.
- சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ சலித்த செம்மண்ணை சம அளவில் பரப்பிவிட வேண்டும்.
- புதிய சாணம் 2 கிலோ மற்றும் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை 10 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
- மேலும் தண்ணீரை 10 செ.மீ. உயரம் வரை ஊற்ற வேண்டும்.
- 500 - 1 கிலோ அசோலா விதைகளை அதன் மேல் தூவி லேசாக தண்ணீர் தெளிக்கவும்.
- ஒரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து தொட்டி முழுவதும் பரவி இருக்கும்.
- தினமும் 500 கிராம் அசோலா அறுவடைக்கு புதிய சாணம் 1கிலோ மற்றும் 20 கிராம் சூப்பர் பாஸ்பேட்டு கலந்த கலவையை ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறை தொட்டில் இடவேண்டும்.
- மெக்னீசியம், இரும்பு, தாமிரம் மற்றும் சல்பர் கலந்த நுண்ணூட்ட கலவையை ஒவ்வொரு வாரத்திற்கு ஒருமுறை இட்டால் அவை அசோலாவில் தாது உப்புகளின் அளவை அதிகரிக்கும்.
- மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.
- 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.
- அசோலா விதைகளை தவிர ஆறு மாத்த்திற்கு ஒரு முறை அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சுத்தமான சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.
நன்றாக வளர்ந்த அசோலா
அசோலா உற்பத்திக்கான தொட்டிகள்
கலப்பு விகிதம்
- இப்படி பெறப்பட்ட அசோலாவை1:1 என்ற அளவில் நாம் ஏற்கனவே கொடுத்துக் கொண்டுள்ள உணவுடன் தரலாம் அல்லது இதை மட்டும் நேரடியாகவும் தரலாம்.
- இது போல் அசோலாவைக் கொடுக்கும் போது கால்நடைகளானது 10-12% பால் அதிகமாகக் கறக்கிறது.
- மேலும் இதன் மூலம் விவசாயிகளுக்கு 20-25% சேமிப்பும் கிடைக்கிறது.
- பறவைகளுக்கு இதனைக் கொடுப்பதால் அதன் நிறை அதிகரிக்கிறது
- 2kg அசோலா படுக்கையிலுள்ள மண்ணான்து 1kg NPK உரமாக வரும் 6மாதங்களுக்குப் பயன்படும்
மேலும் விளக்கமாக பார்க்க
கருத்துரையிடுக Facebook Disqus