தொழிலில் பழம் தின்று கொட்டை போட்டிருக்கிறது விக்கர்ஸ் என்ற பிரிட்டன் நிறுவனம். அந்நிறுவனம்தான் தற்போது வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்கைக் கொண்டு புதிய வகை பீரங்கிகளைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது.
எடை குறைந்த இந்த பிளாஸ்டிக் பீரங்கி, நடைமுறையிலுள்ள 70 டன் பீரங்கிக்கு ஒரு மாற்றாக விளங்கும். கம்ப்யூட்டர் பொருத்தப்பட்டுள்ள இந்த பீரங்கியை ரிமோட் மூலமும் இயக்க முடியும். ஆறு மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பீரங்கி வெறும் ஒன்றரை டன் எடை கொண்டது.
மின் காந்தங்களின் உதவியுடன் இயங்கும் பிளாஸ்டிக் பீரங்கி மிகவும் வேகமாக நகரும்; அதே சமயம் கரடுமுரடான பகுதிகளில் தாக்குதலை மேற்கொள்ளும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன கால போர் உத்திகளுக்கு ஏற்றதாக இது கருதப்படுகிறது. உலக நாடுகளிடையே இதற்குப் பெருத்த வரவேற்பு இருக்குமென விக்கர்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது. சமாதானப் பிரியர்களுக்கு இது கவலையளிக்கும் செய்தி என்பதில் சந்தேகமில்லை!
கருத்துரையிடுக Facebook Disqus