0
புதிய ஊசியற்ற முறைமூலம் மருந்துகளை உயர்வேக அழுத்தத்தின்மூலம் தோலுக்குள் புகுத்தக்கூடிய முறை விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனியும் ஊசி குத்தினால் நோகுமே என்று பயப்படுபவர்களுக்கும் பயத்தினால் தடுப்பு மருந்துகளைத் தவிர்ப்பவர்களுக்கும் இதுவொரு வரப்பிரசாதந்தான்.

Star Trek திரைப்படத்தில் வருவதுபோன்ற வகைக் கருவியினை தேவையானளவு மருந்துகளை வேறுபட்ட தோல் ஆழத்திற்குள் செலுத்துவதற்கு நிகழ்ச்சிநிரற்படுத்தலாம்.

Star Trek விஞ்ஞானத் திரைப்படத்தில் வரும் விண்வெளிக் கப்பலின் மருத்துவ அதிகாரியான லியனாட் போன்ஸ் மக்கோய் காயங்களுக்கு இவ்வாறான ஊசியற்ற கருவியினையே பயன்படுத்துவார்.

இந்தக் கருவியானது மிகவும் முன்னேற்றகரமான கண்டுபிடிப்பென்று கூறும் ஆய்வாளர்கள், இதன் ஏனைய அனுகூலங்களை விடவும் தாதிமார்களும் வைத்தியர்களுங்கூட தவறுதலாக ஊசியால் தம்மைத்தாமே குத்தும் சந்தர்ப்பங்களையும் இது குறைக்கின்றதென்கின்றனர்.

தொடர்ச்சியாக இன்சுலின் பயன்படுத்துபவர்கள் மற்றும் தமக்குத்தாமே ஊசிமருந்து செலுத்துபவர்கள் என்பவர்களுக்கு இது நல்லதொரு விடயமாக இருக்கும்.

கடந்த சில தசாப்தங்களில் விஞ்ஞானிகள் ஊசிகளுக்குப் பதிலாகப் பலதரப்பட்ட மாற்றுக்களையும் செய்துவந்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக, மருந்துகளைத் தோலுக்கூடாக மெதுவாகச் செலுத்தும் நிக்கொட்டின் உறைகள் போன்றனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தோலின் துளைகளுக்கூடாகச் செல்லக்கூடிய இந்த உறைகளால் மருந்து மூலக்கூறுகளை மட்டுமே உட்செலுத்த முடியும்.

தற்போது வலுமிக்க காந்தத்தினைச் சுற்றிலும் வயர்களினால் சுற்றப்பட்டுக் காணப்படும் இந்தப் பொறிமுறையானது (வலுமிக்க மோட்டார்) Lorentz எனப்படுகின்றது.

மின் பிரயோகிக்கப்படும்போது இது காந்தப்புலத்துடன் செயற்பட்டு ஒரு வலுவை உருவாக்கி பிஸ்ரனை முன்னோக்கித் தள்ளும். இது மருந்தினை அதியுயர் அழுத்தத்துடனும் வேகத்துடனும் அதன் வாயின்மூலம் வெளிச்செலுத்தும். இந்த வாய்ப்பகுதி நுளம்பினது உணரியின் அளவையொத்ததாகவே இருக்கும்.


கருத்துரையிடுக Disqus

 
Top