புதியதொரு iPhone மென்பொருள் மூலம் Facebook இல் நண்பர்களைச் சுட்டிக்காட்டுவதானது இன்னும் சற்று இலகுவாகிவிட்டது.
KLiK என்ற புதிய iPhone மென்பொருளானது தன்னியக்கமாகவே முக அடையாளத்தைக் கண்டுகொண்டு நிழற்படங்களிலுள்ள நண்பர்களை அடையாளங்காட்டுகின்றது.
இது Facebook உடன் தொடர்புள்ளதுடன் ஒரு பயனாளரின் வலையமைப்பிலுள்ள நண்பர்களை மட்டுமே அடையாளங் காட்டும்.
எனினும் இதில் Facebook தவிர்ந்த வேறு நபர்களையும் ‘learn’ என்ற முறைமூலம் அடையாளங்காணலாம்.
வீதியில் செல்லும் ஒருவரைக் காட்டி அதனை வேலைசெய்ய வைத்தால் அது வேலைசெய்யாது என்றார் இதனை வெளியிட்ட Face.com என்ற தொழிநுட்பத் தளத்தின் நிர்வாகி.
இந்த மென்பொருளானது சாம்சங்கின் Galaxy S3 இலுள்ள ஒரு செயற்பாட்டையும் செய்கின்றது.
இதில் Instagram வகை வடிகட்டிகளையும் (filters) இணைக்கலாம். அத்துடன் படங்களின்மீது எழுத்துருக்களையும் எழுதலாம்.
இது உண்மையில் தனிப்பட்டதுதான் என்கின்றார் இதனை வடிவமைத்தவர்.
விருந்துகளின்போது பல படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால் இதில் ஒருசிலவே அடையாளங்காணப்படுகின்றன. இதற்கு இந்த மென்பொருள் உதவும். அதில் நண்பர்களின் படங்களை Facebook உடன் தொடர்புறும்போது இது அடையாளங் காட்டும்.
இதில் Instagram வகை வடிகட்டிகளையும் பயனாளர்கள் பயன்படுத்தலாமென்பதோடு அவற்றை Facebook, ருவிட்டர் அல்லது மின்னஞ்சலூடாகப் படங்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.
2009இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் இன்னும் பல புதிய மென்பொருட்களையும் வெளியிட்டுள்ளது. இதில் Photo Finder மற்றும் Facebook இற்குப் பொருந்தக்கூடிய படங்களை அடையாளங்காண்பதற்காக நண்பர்களின் படங்களை ஸ்கான் செய்யும் ஒரு மென்பொருளும் அடங்கும்.
அத்துடன் முகஅடையாளத்திற்கான தொழினுட்பத்தினையும் இந்த நிறுவனம் வழங்குகின்றது. இது ஒருவரின் அடையாளத்தை வெளியிடாமல் அதில் தெரியும் தகவல்களைக் கொண்டு வேறுபடுத்தும். இதில் பால், குணம் மற்றும் வயதுங்கூட வெளிப்படும்.

கருத்துரையிடுக Facebook Disqus