0
பாகிஸ்தானில் இருந்து பிரான்ஸ் சென்ற பெண், விமானத்தில் தூங்கி விட்டதால் மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்பினார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு விமானம் புறப்பட்டது. அதில் பாட்ரிஸ் கிறிஸ்டைன் என்ற பெண் பயணம் செய்தார். 6,000 கி.மீ. தூர பயணம் என்பதால், அவர் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு, கண்ணை கட்டிக்கொண்டு படுத்துவிட்டார்.

விமானம் பாரிஸ் சென்றபோது பாட்ரிஸ் தூக்கத்தில் இருந்துள்ளார். மற்ற பயணிகள் இறங்கிச் சென்றுவிட்ட நிலையில், பாட்ரிஸ் தூங்கி கொண்டிருப்பதை ஊழியர்களும் கவனிக்கவில்லை.

2 மணி நேரத்துக்கு பின்னர் பாரிசில் இருந்து விமானம் மீண்டும் லாகூர் புறப்பட்டது. விமானம் பறக்க தொடங்கியதும் திடீரென தூக்கத்தில் இருந்து விழித்த பாட்ரிஸ் அதிர்ச்சி அடைந்தார். தான் பாரிசில் இறங்க வேண்டும் என்றும், விமானத்தை பாரிசுக்கு திருப்புங்கள் என்றும் ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அதை ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் லாகூரில் இருந்து கிளம்பியவர் மீண்டும் லாகூரிலேயே வந்து இறங்கினார். விமானத்தில் ஒரு பயணி தூங்குவதை கவனிக்காமல் ஊழியர்கள் அஜாக்கிரதையாக இருந்தது குறித்து விசாரணை நடக்கிறது.

கருத்துரையிடுக Disqus

 
Top