சர்கோசி பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்தபோது, பிரிட்டிஷ் பிரதமராக இருந்த தமது முன்னாள் சகா டோனி பிளேரின் காலடித் தடங்களைதான், இந்த விஷயத்திலும் பின்பற்றியிருக்கிறார். டோனி பிளேர் பிரிட்டிஷ் பிரதமர் பதவியில் இருந்து இறங்கியவுடன், இதே அமெரிக்க வங்கி மோர்கன் ஸ்டேன்லி, பிளேரையும், ‘சிறப்பு ஆலோசகராக’ சேர்த்துக் கொண்டது.
டோனி பிளேர் பிரிட்டிஷ் பிரதமர் பதவியில் இருந்து இறங்கிய பின், 6 ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளார். பிரைவேட் ஜெட்டில் உலகை சுற்றி வருகிறார். வருட வருமானம், 20 மில்லியன் பவுன்ட்ஸ் என்று கணக்கு காட்டியுள்ளார். அதில், 2.5 மில்லியன் பவுன்ட்ஸ் வந்தது, மோர்கன் ஸ்டேன்லி வங்கி கொடுத்த ஊதியம்.
சரி. சர்கோசியின் சிறப்பு ஆலோசகர் பணி எத்தகையது?
வருடத்துக்கு 1 மணி நேரமே பணிபுரிய வேண்டும். அதற்கு ஊதியம், 2.5 லட்சம் யூரோ. பணி நேரம் 60 நிமிடங்களில், முக்கிய வி.வி.ஐ.பி.கள் முன்னிலையில் மோர்கன் ஸ்டேன்லி வங்கி பற்றி 45 நிமிடங்கள் பேச வேண்டும். மீதி 15 நிமிடங்களுக்கு, மோர்கன் ஸ்டேன்லி வங்கி லோகோவுக்கு முன்னால் நின்று போட்டோக்களுக்கு போஸ் கொடுக்க வேண்டும்!