இதுவரை காலமும், ஏ.டி.எம். எந்திரத்தில் நீங்கள் உங்கள் கார்டை போட்டு பணம் கோரும்போது, பணம் வெளியே வருவதற்கு சில விநாடிகளில் இருந்து ஒரு நிமிடம் வரை எடுக்கும் (பேங்குக்கு பேங்க் வித்தியாசம்) அதற்குள் வேறு ஜாலியான ஜோலி எதிலாவது உங்கள் கவனம் சென்றுவிட்டால், வெளியே வந்த பணம் சிறிது நேரம் உங்களுக்காக காத்திருந்துவிட்டு, மீண்டும் எந்திரத்துக்கு உள்ளேயே சென்றுவிடும்.
அப்படி செல்லும் பணம், ஏ.டி.எம்.க்கு உள்ளே தனியாக ஒரு ட்ரேக்கு சென்றுவிடும். சில நிமிடங்களில், எங்களது கணக்கில் அந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுவிடும்.
இந்த நடைமுறை இன்றில் இருந்து மாற்றப்பட வேண்டும் என இந்திய ரிசர்வ் பேங்க் உத்தரவிட்டுள்ளது.
புதிய நடைமுறையில், வெளியே வந்த பணம், மீண்டும் உள்ளே செல்லாது.
இன்று முதல், பழைய நினைப்பில் இருந்து விடாதீர்கள். பணத்தை நீங்கள் எடுக்க தவறினால், அடுத்து வருபவருக்கு தீபாவளி!