
இணையத்தில் அம்பலமான சாய்பாபா
சாய்பாபா பற்றி பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது இந்த இணையதளத்தின் நோக்கமாகும். ஏழு முதல் முப்பது வயது வரையுள்ள அவருடைய ஆண் பக்தர்களுடன் சாய்பாபா வைத்திருந்த பாலியல் உறவுகளைப்பற்றி நிறையச் செய்திகள் காணப்படுகின்றன.
1960-களிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கட்டுரைகள் வெளிவந்தன. இந்த இணையதளத்தில், டேவிட், மற்றும் பயே பெய்லி ஆகியோரின் கண்டுபிடிப்புகள் (Findings) எனும் அதிகார பூர்வமான ஆவணம் இங்கு முதல் இடத்தைப் பெறுகிறது. அது இணைய தளத்தில் தோன்றியது முதல் பல செய்திகள் அடுத்தடுத்து வந்தன. பக்தர்கள் கோபத்துடனும் குழப்பத்துடனும் தங்களுடைய நிலையை வெளிப்படுத்தினர். ஆனால் சாய்பாபாவின செயல்களுக்கு இலக்கானவர்கள், அவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பாராட்டுதல்களைத் தெரிவித்தனர்;
பாபாவின் போதனைகளில் முக்கியமாக வரும் பாலியல் பக்தரின் ஆன்மீகக் கண்ணோட்டத்தைக் குறைந்துவிடுகிறது. அவரின் ஆஸ்ரமத்தில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகத்தான் தங்க வைக்கப் படுகின்றனர். திருமண மான தம்பதிகள் மட்டும் சேர்ந்து இருக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக இது மாறிவிட்டது. ஆண்பக்தர்களை மட்டும் பாபா தனியாக அழைத்து தரிசனம் தருகிறார். அப்போது எவரும் உடன் இருப்பதில்லை. எந்தப் பெண்ணையும் அவர் தனியாக அழைத்துப் பேசுவதில்லை.
பாபாவின் ஓரினச் சேர்க்கை பற்றி முதன் முதலாக எழுதிய அமெரிக்கக தால்
ப்ரூக் 1970-71-இல் பாபாவுடன் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருந்தார். தனி
தரிசனங்களின் போது பாபா அவரைத் தழுவிக் கொண்டு அவரது பாலுணர்வைத்
தூண்டினார் என்று அவர் கூறினார்.
1980-இல் மலேசிய இந்திய மாணவர்கள் ஒரு பெரும் பிரச்சினையை எழுப்பினர். சாயிபாபா தங்களைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக அவர்களில் பலர் கூறியது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபா நிறுவியுள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, பாபா தங்களைக் கெடுத்து விட்டதாக பல மலேசிய இந்திய மாணவர்கள் கூறினர்.
தொடர்புடைய இணைப்புகள் :
சாய்பாபாவின் லீலைகள். பகுதி 1
http://www.youtube.com/watch?v=hQJgvS6ILUg
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 2
http://www.youtube.com/watch?v=vdsYsRaNA4k&feature=related
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 3
http://www.youtube.com/watch?v=i1cNHc6lask&feature=related
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 4
http://www.youtube.com/watch?v=QmUn7lkGevE&feature=related
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 5
http://www.youtube.com/watch?v=iK3QlPGYiJA&feature=related
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 6
http://www.youtube.com/watch?v=RskbqOOh6Ig&feature=related
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 7
http://www.youtube.com/watch?v=M3oWmzZI_hs&feature=related
1980-இல் மலேசிய இந்திய மாணவர்கள் ஒரு பெரும் பிரச்சினையை எழுப்பினர். சாயிபாபா தங்களைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக அவர்களில் பலர் கூறியது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபா நிறுவியுள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, பாபா தங்களைக் கெடுத்து விட்டதாக பல மலேசிய இந்திய மாணவர்கள் கூறினர்.
தொடர்புடைய இணைப்புகள் :
சாய்பாபாவின் லீலைகள். பகுதி 1
http://www.youtube.com/watch?v=hQJgvS6ILUg
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 2
http://www.youtube.com/watch?v=vdsYsRaNA4k&feature=related
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 3
http://www.youtube.com/watch?v=i1cNHc6lask&feature=related
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 4
http://www.youtube.com/watch?v=QmUn7lkGevE&feature=related
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 5
http://www.youtube.com/watch?v=iK3QlPGYiJA&feature=related
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 6
http://www.youtube.com/watch?v=RskbqOOh6Ig&feature=related
சாய்பாபாவின் உண்மை முகம். பகுதி 7
http://www.youtube.com/watch?v=M3oWmzZI_hs&feature=related
மறைந்த சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது.
ரூ. 40,000
கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு
ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது
என்பது குறித்த பிரச்சனைகள் எழுந்தன.
இந் நிலையில் 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம்
தேதி சாய் பாபா எழுதி வைத்த உயில் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. சாய்
பாபாவின் உதவியாளரான சத்யஜித் சாலியன் அதை நேற்று ஸ்ரீ சத்ய சாய் மத்திய
அறக்கட்டளையின் இயக்குனர் குழுவிடம் சமர்பித்தார்.
எனது
பக்தர்களால் தரப்பட்ட எல்லா நன்கொடைகளும் மக்கள் நலப் பணிகளுக்கே
செலவிடப்பட வேண்டும். சொத்துக்களில் எந்தப் பகுதியும் வேறு எந்த தனிப்பட்ட
நபருக்கும் இல்லை. எனக்கு என்று எந்த தனிப்பட்ட சொத்தும் இல்லை. எனது
குடும்பத்தினரின் சொத்துக்களிலும் கூட எனக்கு பங்கு வேண்டாம் என்று
சொல்லிவிட்டேன் என்று கூறப்பட்டுள்ளது.
தனது அறக்கட்டளையின் உறுப்பினரும் சார்ட்டர்ட் அக்கெளண்டன்டுமான இந்துலால் ஷா, மும்பை
உயர் நீதிமன்ற சொலிசிட்டராக இருந்த டிஐ சுக்லா ஆகியோரை சாட்சிகளாக
வைத்துக் கொண்டு இந்த உயிலை எழுதியுள்ளார் பாபா. இதில் இந்துலால் மட்டுமே
இப்போது உயிரோடு உள்ளார்.
இந்த
உயில் வெளியானதன் மூலம் பாபாவின் அறக்கட்டளையின் சொத்துக்களில் அவரது
குடும்பத்தினருக்கு எந்த பங்கும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
சாய்பாபாவின் அறக்கட்டளை புட்டபர்த்தியில் பல்கலைக்கழகம், மருத்துவமனை, மியூசியம், கோளரங்கம், ரயில் நிலையம், விமான நிலையம், விளையாட்டு அரங்கம், பெங்களூரில் மருத்துவமனை, ஆசிரமம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல குடிநீர்த் திட்டங்கள், நாடு முழுவதும் பல கல்வி நிலையங்கள், சுகாதார மையங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
