உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் பார்ப்பதற்கு  கண்கள் மிகவும் இன்றியமையாதவையாகும்.  அந்தவகையில்  உயிரினங்களும் அவற்றின் கண்களும் தொடர்பான சில சுவாரஷ்சியமான சிறப்பியல்புகள் வருமாறு.....
Ø  உலகிலுள்ள உயிரினங்களில் மிகப்பெரிய கண்ணினைக் கொண்ட உயிரினமாக இராட்சத ஸ்க்விட்(Giant Squid) விளங்குகின்றது.  இதன் கருவிழியின் அகலமானது 18 அங்குலங்கள் ஆகும். அதாவது ஒரு தர்ப்பூசணியின் அளவினை ஒத்ததாகும்.
Ø  மனிதர்களுக்கு பிறப்பின்போது எந்த அளவில் கண்கள் இருந்ததோ, அதேஅளவிலேயே அவன் இறக்கும்வரை காணப்படும்.
Ø  எறும்புகளுக்கு இரண்டு கண்களே உண்டு. ஆனால் ஒவ்வொரு கண்களும் சிறியளவான பல கண்களைக் கொண்டுள்ளன. இது "கூட்டுக் கண்" என்றழைக்கப்படுகின்றது.
Ø  நாய்களால் சிவப்பு, பச்சை நிறங்களுக்கிடையிலான வித்தியாசத்தை உணரமுடியாது.(நிறக்குருடு)
Ø  பச்சோந்திகள் மற்றும் கடற் குதிரைகள், தமது கண்களால் ஒரே வேளையில் இரண்டு வித்தியாசமான திசைகளில் பார்க்க கூடிய இயல்பினைக் கொண்டுள்ளன.  இதன் மூலம் அவை தமது எதிரிகளிடம் இலகுவில் மாட்டிக்கொள்வதில்லையாம்.
Ø  டொல்பின்கள் ஒரு கண்ணைத் திறந்தபடியே உறங்கும்.
Ø  தீக்கோழிகளின் கண்ணானது அதன் மூளையினை விடவும் பெரியதாகும்.
Ø  வண்ணத்துப்பூச்சிக்கு எத்தனை கண்கள் தெரியுமா?... ஆம்.. வண்ணத்துப்பூச்சிக்கு 12000 கண்கள் உண்டு.
Ø  நத்தைகளின் கண் வெட்டப்பட்டால் மீண்டும் வெட்டப்பட்ட இடத்தில் புதியதொரு கண் உருவாகும்.
Ø  ஆடுகளின் கண்கள் செவ்வக வடிவிலான கருவிழிகளைக் கொண்டவையாகும்.

 
Top