கீழேயுள்ள போட்டோவில் காண்பது,
காங்கிரஸ்காரர் ஒருவரின் புஜ பல பராக்கிரமம். பட்னாவில் தொழில்துறை மற்றும்
வர்த்தக அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவின் செய்தியாளர் மாநாட்டில்,
ஏடாகூடமாக கேள்வி கேட்ட ஒருவரை காங்கிரஸ்காரர் ஒருவர் (பெயர் தெரியவில்லை)
செல்லமாக தட்டிக் கொடுக்கும் காட்சி இது.
எதிர் கேள்வி கேட்பதற்கென்றே அன்னா ஹாசரே குழுவில் இருந்து சிலர் வந்திருந்தது, அமைச்சரின் ஆதரவாளர்களை கோபமுற வைத்துவிட்டது!
ஞானதேசிகன் ஐயா கவனிக்கவும். இங்கே தமிழகத்தில் நம்மாளுங்களுக்கு பயிற்சி போதாதுங்களே!
அசாமில், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ராஜிவ் காந்தி, சர்ப்பிரைஸ் விசிட் அடித்த காட்சி இது. கௌகாத்தி அருகே உள்ள அகதிகள் முகாம் ஒன்றுக்குள் திடீரென புகுந்த ராகுல், அங்குள்ள மக்களுடன் உரையாடுகிறார். இவர் பிரதமர் ஆனபின் (எப்பவோ ஒரு நாள் வரத்தானே போகிறார்) இந்த விசிட்டுகளை தொடர்ந்து சொய்வாரா?
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவின்போது டாலி லாமாவை சந்தித்து உரையாடியபோது எடுக்கப்பட்ட போட்டோ இது. “நீங்க ஜனாதிபதியாக இருந்தபோது, திபெத்தை சீனாவிடம் இருந்து மீட்டுக் கொடுத்திருக்கலாமே” என்று சொல்லியிருப்பாரோ! (ஆரம்பத்தில் மத்திய அரசு அப்படியொரு வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால், ஆர்வம் காட்டவில்லை)
நேற்று (செவ்வாய்கிழமை) ஊட்டியில் நடைபெற்ற விபத்து ஒன்றில் குடைசாய்ந்து போன பஸ் ஒன்றை எப்படி நிமிர்த்துவது என்று ஆய்வு செய்யும் மக்கள். ஏங்க.. இது பி.ஆர்.பி. கம்பனி பஸ் இல்லைத்தானே…
அசாமில் ராகுல் காந்தி, மூதாட்டி ஒருவரிடம் குறை கேட்கும் காட்சி. இப்படி ஒவ்வொரு ஓட்டாக சேர்த்து, காங்கிரஸை ஜெயிக்க வைத்து விடுவார் போலிருக்கிறதே! சரி. மூதாட்டி என்ன கேட்டிருப்பார்? “பேட்டா… தொழில் செய்ய ஒரு நிலக்கரி சுரங்கம் பட்டா போட்டு கொடுக்க முடியுமா?”
குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர், பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மௌத் அப்பாஸை, புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் வரவேற்றபோது எடுத்த போட்டோ இது. அட பாவி மனுஷா… போட்டோவுக்குகூட சிரிக்க மாட்டீரா?”
சர்ச்சைக்குரிய கார்டூன் வெளியிட்டதாக மும்பை போலீசரால் கைது செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதியை விடுவிக்க கோரி (தற்போது விடுவிக்கப்பட்டு விட்டார்), அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது, ஆவேசமாக கோஷமிடும் போராட்டக்காரர் ஒருவரை, ‘சிம்பிளாக’ தடுக்கும் போலீஸ்காரர்.
இது எப்படி சாத்தியம்? கோஷமிடும் நபர் முன்னே வருவதற்கு முயற்சி செய்யாமல், சும்மா முகத்தில் உணர்ச்சி காட்டும் ஆளாக இருக்கலாம். அல்லது, போலீஸ்காரர் நிஜமாகவே ‘இந்தியன் தாத்தா’ போல முகத்தில் உணர்ச்சி காட்டாத பலசாலியாக இருக்கலாம்.
கூடங்குளம் போராட்டத்தின்போது, பிரார்த்தனை செய்யும் ஒரு பெண். போராட்டம் தொடர்பாக வெளியானவை எல்லாமே, ஆக்ரோஷமான போட்டோக்கள். அவற்றில் இருந்து மாறுபட்ட வித்தியாசமான போட்டோ இது.
அட தேவுடா! மத்திய நிலக்கரித்துறை அமைச்சு அலுவலகத்துக்கு முன்னால் நேற்று (செவ்வாய்கிழமை) யாரோ கட்டிவிட்ட பேனரை பாருங்கள்! நேற்று மாலையே அமைச்சு ஊழியர்களால் இது அகற்றப்பட்டு விட்டது!
மற்றொரு காங்கிரஸ்காரரின் வீர விளையாட்டு. ஒரிசா, புபனேஷ்வர் நடைபெற்ற போலீஸ் – காங்கிரஸ்காரர்கள் மோதலின்போது, போலீஸை விட்டுவிட்டு, பொதுமக்கள் செல்லும் ஆட்டோவை நோக்கி கல்வீசும் காங்கிரஸ் வீரபுருஷன்.
என்னங்க இது. மத்தியில் நம்ம கட்சி ஆட்சி நடக்கிறது. இந்த திறமைசாலியை கட்சியில் வைத்து திறமையை வேஸ்ட் செய்யலாமா? கிரிக்கெட் போர்டு சேர்மனுக்கு யாராவது இவரை சிபாரிசு செய்யுங்களேன்!
சர்ச்சைக்குரிய கார்டூன் வெளியிட்டதாக மும்பை போலீசரால் கைது செய்யப்பட்ட கார்டூனிஸ்ட் அசீம் திரிவேதி ஆர்தர் ரோடு ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்தபோது, ஆதரவாளர்களுக்கு நன்றி கூறுகிறார்.
கூடங்குளம் கிராமத்தின் வீதி ஒன்றில் போடப்பட்டிருந்த தடை இது. வீதித் தடைகளை கடந்து கிராமத்துக்குள் புக முடியாமல் போலீஸ் திணறியது என்று நாமும்தான் செய்தி வெளியிட்டோம். அங்கிருந்து நிருபர்களால் கொடுக்கப்பட்ட செய்தி அது. ஆனால், போட்டோவில் இந்த தடையை பார்க்கும்போது, என்ன தோன்றுகிறது?
“அடப் பாவமே.. ரொம்ப நோஞ்சான் போலீஸ் போலிருக்கே… இதை தாண்டவா திணறினார்கள்?”
கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜான் பெயிர்ட், மத்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவை டில்லியில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட போட்டோ இது.
கனேடிய வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் ஒருதடவை பேசிக்கொண்டிருந்தபோது, “இந்தியர்களுக்கு விசா வழங்கலை மிக சுலபமாக்கிய நாடுகளில் கனடாவும் ஒன்று. ஆனால், அதைப் பற்றிக்கூட உங்க மீடியா எழுதவில்லை. கனேடியர்களுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் பூச்சியம்” என்றார்.
இப்போ சந்தோஷமா? (நம்ம உளவுத்துறை CSIS (Canadian Security Intelligence Service) சி.ஐ.ஏ. போல ஏதாவது வீரதீர சாகசங்கள் செய்தால், சரம் சரமாக செய்தி வெளியிடுவோமே!
கூடங்குளம் அணு உலைக்கு வெளியே இன்று (புதன்கிழமை) போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு!
பட்னாவில் தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவின் செய்தியாளர் மாநாட்டில், ஏடாகூடமாக கேள்வி கேட்ட ஒருவரை காங்கிரஸ்காரர் ஒருவர் செல்லமாக தட்டிக் கொடுத்த போட்டோவை, ஏற்கனவே பார்த்தீர்கள் அல்லவா?
அதே பட்னாவில், அதே செய்தியாளர் மாநாட்டில், அதே அன்னா ஹாசரே குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் கேள்வி கேட்டபோது, “கொஞ்சம் பொறும்மா.. நானே வர்ரேன்” என்று அமைச்சரே கீழே இறங்கி வந்து, ஆர்வமாக கேட்பதை பாருங்கள். கேள்வி கேட்க பெண்களைதான் அனுப்ப வேண்டும் போலிருக்கிறதே!