இது ஒரு புது டிசைன் என்பதால்,
வீதியில் செல்பவர்கள் எல்லாம் திரும்பிப் பார்க்கிறார்கள். ஒரு
சைக்கிள்தான் என்பதை புரிந்துகொள்ள சில விநாடிகள் எடுக்கின்றன. தொடர்ந்து
ஒரு புன்னகை. பின், எப்படி இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள ஆவல்.
ஜெர்மன் வீதியோர நடைபாதைகளில் சோதனை ஓட்டமாக இந்த சைக்கிள் ஓடும்போதுதான், பலரின் கவனத்தை கவர்கிறது. (அங்கெல்லாம் வீதியில் ஓட முடியாது. நடைபாதை அல்லது சைக்கிள் பாதையில் மட்டுமே ஓடலாம்)
ஜெர்மன் டிசைனர்கள் தயாரித்த பெடல் மற்றும் சீட் இல்லாத சைக்கிள் இது. சைக்கிளின் மேல் பகுதியில் உள்ள ஸ்ட்ராப் ஒன்றை உடலோடு இணைத்துக் கொள்ளலாம். சைக்கிளில் ஓடும்போது, பறப்பது போன்ற உணர்ச்சி ஏற்படும்!
இதற்கு ஃபிளிஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காலால் சிறிது தொலைவு ஓடிவிட்டு, கால்களை தூக்கி பின் சக்கரத்துக்கு அருகில் உள்ள .பூட் ரெஸ்ட்டில் வைத்துக் கொண்டு பறக்கலாம். உடலுக்கு எக்சர்சைஸூம் ஆயிற்று.
பார்வைக்கு கொஞ்சம், கார்ட்டூன் காரெக்டர் Fred Flintstone பயன்படுத்தும் கார் போல உள்ளது அல்லவா? அதுதான் த்ரில் என்கிறார்கள் இதன் டிசைனர்கள்.
ஜெர்மன் டிசைனர்கள் Tom Hambrock, Juri Spetter ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த ஃபிளிஸ். “தற்போதுதான் வீதிகளில் அறிமுகம் செய்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் காலம் போகட்டும், இதுதான் ஐரோப்பாவில் பிரபல சைக்கிளாக இருக்கும். மற்றைய சைக்கிளில் பயணிப்பதைவிட இதில் செல்லும்போது பறப்பது போன்ற ஃபீலிங் வருவதை பலரும் விரும்ப போகிறார்கள்” என்கிறார்கள் இருவரும்.
சைக்கிள் ஃபிரேமின் மேல் பகுதியில் உள்ள தோல் பட்டி, உடலை பாலன்ஸ் பண்ணி தாங்கும் வகையில் உள்ளதுடன், மிருதுவான லெதரால் ஆனது. எனவே, தொங்கிக் கொண்டு பறக்கும்போது, உடல் வலி தெரியாது என்கிறார்கள். எக்சர்சைஸ் செய்பவர்களுக்கு மிகவும் சிறந்தது. காரணம், ஜாகிங், மற்றும் சைக்கிளிங் இரண்டுமே ஒன்றாக கிடைக்கிறது!
இதன் இன்ஸ்பிரேஷன் எது? மனிதன் முதல் தடவையாக, தான் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதற்கு இரு சக்கரங்களால் ஆன கருவி ஒன்றை கண்டுபிடித்தது, 1817-ம் ஆண்டு. அப்போது கண்டுபிடித்த கருவிதான் பின்னாட்களில் சைக்கிள் ஆகியது. அதில் இருந்துதான் சக்கரங்கள் மூலம் போக்குவரத்து துவங்கியது.
1817-ம் ஆண்டு முதலாவது இரண்டு சக்கர கருவி கண்டுபிடிக்கப்பட்ட போது, அதற்கு பெடல் கிடையாது! அதை கண்டுபிடித்த கார்ல் டிரெயிஸ் என்பவர் ஒரு ஜெர்மன்காரர்தான்! அதை இன்ஸ்பிரேஷனாக வைத்து, ஜெர்மனியில் 2012-ல் ஃபிளிஸ் என்ற இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது!
சரி. ஃபிளிஸ் என்று ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள்? flitzen என்ற ஜெர்மன் சொல்லின் சுருக்கம் இது. flitzen என்றால், வேகம்!