"சிறைக்குச் சென்றவர்' என்ற முத்திரையை தவிர்க்கும் வகையில், தீவிர சீர்திருத்த மையத்தில் பயிற்சி பெற்று விடுதலையாகும் கைதிகளுக்கு, தனியார் நிறுவனத்தில், மாதம் 8,000 ரூபாய் சம்பளம் கிடைக்கும் வகையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது.


புழல் விசாரணை சிறையில், மனரீதியாக கைதிகளுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும், "தீவிர சீர்திருத்த மையம்' உள்ளது. ஒரு குழுவிற்கு, 150 கைதிகள் வீதம், தேர்ந்தெடுத்து, தியானம், யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மனமாற்றம் அடைந்தோர் விடுதலையாகும் போது, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், சிறையில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

முதல் குழுவில் இடம் பெற்ற, 100 பேரிடம், அம்பத்தூரில் இயங்கும் தனியார் நிறுவனம், சமீபத்தில் நேர்முகத் தேர்வு நடத்தியது. அதில் மனம் மற்றும் உடல் ரீதியாக தகுதி வாய்ந்த, 30 பேர் தேர்வாயினர். அவர்களுக்கான பணி நியமன உத்தரவு வழங்கும் விழா நேற்று மாலை சிறை வளாகத்தில் நடந்தது. அதில் சிறைதுறை அமைச்சர் சண்முகம், 30 பேருக்கு, "தனியார் காவலர்' பணிக்கான உத்தரவை வழங்கினார்.

விடுதலைக்குப் பின் கைதிகள் குறிப்பிட்ட நிறுவனத்தில் காவலாளியாக சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களுக்கு, மாதம், 8,000 ரூபாய் சம்பளமாக கிடைக்கும். விழாவில் சிறைத்துறை கூடுதல் இயக்குனரர் டோக்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இனி  வேலை வேணும்னா எதாவது பண்ணிட்டு சிறைக்கு போனசுலபமா ஒரு வேலை கிடைக்கும் .........
 
Top