பள்ளியில் நடந்த சில உண்மைகள் (Repost)


சீருடை அழுக்கென்று
சினந்தேன் 
அந்த மாணவியை‌...

மறுநாள்
ஈரச் சீருடையோடு வந்தாள்..

உடம்புச் சூட்டில்
உலர்ந்துவிடும் என்று
மாட்டிவிட்டாளாம் அம்மா..

காய்ந்த வயிற்றிலும்
உலரவில்லை
ஈர விழியில் நனைந்த
ஓருடை..
 
Top