ஜன்னல் தோட்டம்:
நகரங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை, சமாளிப்பதற்கான பல்வேறு கருத்துருக்கள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று, ஜன்னல் தோட்டம். ஏற்கனவே, வளர்ந்த நாடுகள் மாடித்தோட்டம் என்ற, நகர விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, ஜன்னல் தோட்டங்களை நிறுவினால், கூடுதல் சத்தான காய்கறிகள் வீடுகளிலேயே கிடைக்கும் என்கின்றனர் ஜெர்மானிய வல்லுனர்கள். மாடித்தோட்டம் அமைக்க இயலாதவர்கள், அதற்கு, மாற்றாக ஜன்னல் தோட்டங்களை அமைக்கலாம்.
எப்படி அமைப்பது?
பரு முனையை வட்ட வடிவமாக வெட்டி, அதற்குள், மற்றொரு பிளாஸ்டிக் பாட்டிலின் நுனிப்பகுதியை இணைக்க வேண்டும். இப்போது, இரண்டு பாட்டில்களுக்கும் தொடர்பு ஏற்படும். அதே போல் பத்துக்கும் மேற்பட்ட பாட்டில்களை, இணைக்க வேண்டும். பின், ஒவ்வொரு பாட்டிலிலும், இதற்கென்றே பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சிறு மண் சத்து உருண்டைகளை இட்டு, அடுத்தடுத்த பாட்டில்களுக்குள் தண்ணீர் செல்லும் வகையில், வடிவமைக்க வேண்டும். பாட்டில்களுக்கு தண்ணீர் செலுத்தும் வகையில், இரண்டு பெரிய கேன்களில் இணைக்க வேண்டும். (பார்க்க: படம்) அதிலிருந்து செல்லும் தண்ணீர், அனைத்து பாட்டில்களிலும், பாயும். அதில் செடிகள் வளர்க்கலாம்.
சத்தான காய்கறிகள்:
ஜன்னல்
தோட்டம் அமைப்பதால், வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நாமே பயிர் செய்து
கொள்ளலாம். வயல்வெளிகளில் விரைவில் விளைச்சல் காணவும், அதிக உற்பத்தியை
பெருக்கவும் பூச்சி மருந்துகளையும், பல்வேறு நவீன உரங்களையும் இடுகின்றனர்.
இதனால் காய்கறிகளில் இருக்கும் இயற்கைச் சத்துகள் அருகி வருகின்றன.
ஜன்னல் தோட்டம் அமைத்தால், வீட்டிற்கு தேவையான காய்கறிகளை நாமே பயிர்
செய்து கொள்ளலாம்.
வீட்டில் மருந்தகம்:
ஜன்னல்
தோட்டத்தில் காய்கறி செடிகள் வளர்ப்பவர்கள், மூலிகைச் செடிகளையும்
வளர்க்கலாம். குறிப்பாக இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு, அகத்தி, ஆடுதிண்டாப்
பாளை, ஆடாதொடை, இஞ்சி, ஊமத்தை, எலுமிச்சை, துளசி, ஓமவல்லி, கண்டங்கத்திரி,
கரிசலாங்கண்ணி, பிரண்டை, கீழாநெல்லி, சிறுகுறிஞ்சான், திருநீற்றுப்
பச்சிலை, தூதுவளை, பொன்னாங்கன்னி, மணத்தக்காளி உள்ளிட்ட மூலிகை பயிர்களை
வளர்ப்பதன் மூலம், காமாலை, இருமல், காய்ச்சல், கண்புகைச்சல், வாய்ப்புண்
போன்ற நோய்களை தவிர்க்கவல்ல பல்வேறு விதமான பயிர்களை வீட்டிலேயே
வளர்க்கலாம். பின்விளைவுகள் இல்லாத இயற்கை மருந்துகள் எளிதாக நமது வீட்டு
மாடியிலேயே கிடைக்கும். மேலும், வீட்டில் வளர்க்கும் மூலிகைப் பயிர்களின்
வாசம் நம் வீட்டிற்கு மட்டுமின்றி, அண்டை வீடுகளுக்கும் வீசுவதால், உடல்
சுவாசத்துக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது.