நான் பணிபுரியும் அலுவலகத்தின் வங்கி கணக்கு, ஒரு தேசிய வங்கியில் உள்ளது. அது, கிராமப்புற வங்கி என்பதால், அதிகமாக படிக்காத வாடிக்கையாளர்களும் வருவர். அதில் பலர், அவர்களுடைய பண பரிமாற்றங்களுக்கு, மற்றவர்களிடம் உதவி கேட்டே செய்வதால், அங்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதனால், அவர்களின் வங்கி பரிமாற்றங்கள் முடிவடைய அதிக நேரமாகும்.

சில நாட்களுக்கு முன், வங்கிக்கு போனபோது, ஒரு பெரியவர், வாடிக்கையாளர் பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து, அங்கு வரும் எழுத, படிக்க தெரியாத வாடிக்கையாளர்களுக்கு, வங்கி பரிமாற்றத்திற்கான விண்ணப்பங்களை எழுதிக் கொடுத்து கொண்டிருந்தார். இதனால், வாடிக்கையாளர்களின் வங்கி பணிகள், விரைவாக நடைபெற்றதை கண்டு ஆச்சரியமடைந்தேன்.

அவரைப் பற்றி விசாரித்ததில், அவர் அருகே உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர் என்றும், வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், இப்படி வந்து, பிறருக்கு உதவுவதாக கூறினார்.

அலுவலகத்தில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற பெரியவர்கள், வீட்டில் அமர்ந்து கொண்டு, பொழுதுபோகவில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதில், அனைத்து மக்களும் வருகை தரும் அருகிலுள்ள தேசிய வங்கியில் அமர்ந்து, இதுபோல் சேவை செய்தால், பொழுதுபோக்கு மற்றும் மன நிம்மதி கிடைப்பதுடன், உடல்நலம் குறித்த கவலைகளும் மறந்து போகும்.

முயற்சித்து பாருங்கள் பெரியவர்களே!

வங்கி  இவர் போன்றவர்களுக்கு சிறிது சம்பளம் கொடுத்து வங்கியில் நிரம்பும் கூட்டத்தை குரைக்கலாம் ..
 
Top