காஸ் தீர்ந்தும் எரிந்த அடுப்பு :
ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த அர்ச்சகர் ஸ்ரீராம் என்பவர் இக்கோயிலில் யாகம் நடத்திபோது யாக தீயில் அம்மன் நடனமாடிய காட்சி தோன்றியது. இதை அவர் தனது மொபைலில் போட்டோ எடுத்தார். இதைத்தொடர்ந்து பௌணர்மி அன்று மாலை 5 மணியளவில் இரவு பூஜைக்காக மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த விஜயா என்பவர் (பிரசாதம்) பொங்கல் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் காஸ் தீர்ந்து அடுப்பு எரிவது நின்றது. இதையடுத்து ஸ்ட்வை ஆப் செய்த விஜயா, ரெகுலேட்டர் வயரை கலட்டி வைத்துவிட்டு, மாற்று சிலிண்டர் கொண்டு வருமாறு அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்த சிறிது நேரத்தில் காஸ் ஸ்ட்வ் சிலிண்டர் இல்லாமல் எரிவது கண்டு திடுக்கிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா ஓடிச்சென்று கோயிலுக்கு வந்திருந்தவர்களிடம் இது குறித்து தெரிவித்தார். பொதுமக்கள் திரளாக நின்று இந்த அதிசய சம்பவத்தை பார்த்தனர். இதைபார்த்த பெரியம்மாபாளையம் கிராமத்தை கார் டிரைவரான நந்தகுமார் தனது மொபைலில் இக்காட்சியை போட்டோ எடுத்துள்ளார். அடுத்தடுத்து இக்கோயிலில் அதிசய சம்பவங்கள் நடந்து வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து துறைமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்) கூறியதாவது: கடந்த 2010ம் ஆண்டு ஆவணி மாதம் பௌணர்மி அன்று எனது கனவில் தோன்றி படைவெட்டி அம்மன் மாவிலிங்கை கிராமத்தில் தனக்கு வழிபாடு நடத்தாமல் தனது கோவில் சிதிலமடைந்து கிடப்பதாகவும், தனக்கு பூஜை நடத்துமாறும் தெரிவித்தார். இதையடுத்து கனவில் வந்த ஊருக்கு நான் நேரில் சென்று பார்த்தபோது கனவில் வந்த காட்சி அங்கு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதையடுத்து 2011ம் ஆண்டு அந்த இடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகமும், 2012ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினேன்.