எலி பற்றி விளக்கம்:
வேலூர், திருப்பூர், திருநெல்வேலி, மதுரை, கோவை, தூத்துகுடி, சேலம், ஈரோடு, திருச்சி ஆகிய மாநகராட்சி ஊழியர்கள் இவர்கள். பயிற்சியின் முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சி பூச்சியியல் வல்லுனர்கள் எலிகள் பற்றி விளக்கம் அளித்தனர். பின்னர் நேரடி பயிற்சிக்கு அழைத்து சென்றனர்.கஸ்தூரிபாய் மருத்துவமனை, மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை, நேதாஜி சிலை, விவேகானந்தர் சிலை, அவ்வையார் சிலை, காந்தி சிலை, கலங்கரை விளக்கம் ஆகிய பகுதிகளில் பயிற்சி நடந்தது. இந்த பகுதிகளில் 551 இடங்களில் எலி பொந்துகளை கண்டுபிடித்து விஷம் வைக்கப்பட்டது.
பயிற்சியின் முக்கிய அம்சங்கள் விவரமாவது:*பொந்துகளை கண்டுபிடிப்பது
*அவற்றில் எலி உள்ளதா என்பதை அறிவது
*ஏமாற்றி தப்ப முயலும் எலிகளை மடக்குவது
*வசப்படாத எலிகளை வசியப் படுத்துவது
*தக்காளியில் விஷம் வைக்கும் போது ஏற்படும் சிக்கல்கள்
*வசப்படாத எலிகள் கருவாட்டைக் காட்டி மடக்குவது
*செத்த எலிகளை பாதுகாப்பாக அகற்றுவது
இந்த அம்சங்கள் முக்கியமாக பயிற்சியின் போது சுட்டிக் காட்டப்பட்டன. நேரடி பயிற்சியின் போது, விஷம் கலந்த தக்காளிகளை எலிகள் சீண்டவே இல்லை. ஆனால் கருவாட்டை வளைகளுக்கு அருகே கொண்டு சென்ற போது மின்னல் என பாய்ந்து வந்து கவ்வி இழுத்துச் சென்றன. இதை ஊழியர்கள் குதூகலத்துடன் பார்த்தனர்.
சென்னை மாநகர பகுதிகளில், ஐந்து நாட்களில், 26 ஆயிரம் வளைகளை கண்டுபிடித்து, விஷம் வைத்து 2,278 எலிகளை கொன்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆக., 29ம் தேதி முதல், செப்., 2ம் தேதி வரை, 26,019 எலி வளைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில், 2,278 எலிகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு, புதைக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
எப்போது?
இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களை எலி ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனரா என மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,""இதுகுறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தேவைப்பட்டால், அவர்களை பயன்படுத்துவது குறித்து மாநகராட்சி பரிசீலிக்கும்,'' என்றார்.