பாரீஸ் நகரின் முக்கிய அடையாளமாக திகழ்வது, வெர்சலீஸ் அரண்மனை. ஒரு காலத்தில், பிரான்சின் அரசியல் அதிகார மையமாக, இது இருந்தது. இந்த அரண்மனையில், அறைகளின் எண்ணிக்கை, 2,300. ஜன்னல்கள், 2,153. இது தவிர, ஆயிரக்கணக்கான சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவையும், இந்த அரண்மனையை, அழகின் சின்னமாக, அடையாளம் காட்டி வருகின்றன.
இந்த அரண்மனையின் பெருமையை நினைவுறுத்தும் வகையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஓடும் புறநகர் ரயில் ஒன்றின் உட்புறத் தோற்றத்தை, வெர்சலீஸ் அரண்மனை போன்றே வடிவமைத்து உள்ளனர்.
 பாரீசில் ரயில் போக்குவரத்தை கவனித்து வரும் நிர்வாகமும், வெர்சலீஸ் அரண்மனை நிர்வாகமும் சேர்ந்து, இந்த பணியை மேற்கொண்டு உள்ளன. அழகு மிளிரும் சிலைகள், அற்புதமாக வரையப்பட்ட ஓவியங்கள், சிம்மாசனம் போல் வடிவமைக்கப்பட்ட இருக்கைகள் என, ரயிலின் ஒவ்வொரு பகுதியும், அச்சு அசலாக, அரண்மனையை நினைவுபடுத்துகின்றன. "இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு,

அரண்மனைக்குள் சென்று வந்த அனுபவம் கட்டாயம் கிடைக்கும்...' என உறுதி அளிக்கின்றனர், ரயில்வே அதிகாரிகள்.
 
Top