இந்தியாவில் உள்ள குஜாரத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு
ஒன்றால் பிரம்மகுமாரிகள் இளையோர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள்
நிறைவு பெற்று உள்ளன.
அத்துடன் இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளும், அஹமதுபாத் நகரம் அமைக்கப்பட்டு 600 ஆண்டுகளும் நிறைவு பெற்று உள்ளன.
இவற்றை முன்னிட்டு உலகின் மிக நீளமான கடிதம் இம்மாணவர்களால் எழுதப்பட்டு கின்னஸ் சாதனை புரியப்பட்டு உள்ளது.
கடவுளுக்கு மக்கள் கடிதம் எழுதுகின்றமைக்கான வைபவம் ஒன்று இவர்களால் ஒழுங்கு பண்ணப்பட்டது.
இதில் 2800 பொதுமக்கள் வரை பங்கேற்று மூன்று மணித்தியாலங்களில் 2841 அடி நீளமான இக்கடிதத்தை எழுதினார்கள்.
மகிழ்ச்சியான வாழ்க்கையை தந்தமைக்காக கடவுளுக்கு இக்கடிதத்தில் நன்றி தெரிவித்து உள்ளமையுடன் வறுமை, இலஞ்சம், ஊழல், பயங்கரவாதம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்புத் தர கோரி உள்ளார்கள்.
இதற்கு முந்திய உலகின் மிக நீளமான கடிதம் 2000 ரொமானியர்களால் 1358 அடி நீளமானதாக நத்தார் தாத்தாவுக்கு எழுதப்பட்டது.