அமெரிக்க உளவுத்துறை FBI-யின் கம்ப்யூட்டரில் இருந்து 12 மில்லியன் பேரின் ஐ-போன், ஐ-பேட் இலக்கங்களை திருடியிருப்பதாக தெரிவித்துள்ளது ஒரு ஹக்கிங் குரூப். தாம் திருடிய போன் நம்பர்களில் சிலவற்றை ‘சாம்பிளாக’ இன்டர்நெட்டிலும் வெளியிட்டுள்ளார்கள் இவர்கள். ‘அன்டிசெக்’ என்பது இந்த ஹக்கிங் குரூப்பின் பெயர்.


இவர்கள் திருடிய விவகாரம், வேறு ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், 12 மில்லியன் பேரின் போன் நம்பர்களை, அமெரிக்க உளவுத்துறை ஏன் சேகரித்து வைத்திருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது, இவ்வளவு பேரை அமெரிக்க உளவுத்துறை ரகசியமாக உளவு பார்க்கிறதா, போன்களை ஒட்டுக் கேட்கிறதா என்று சர்ச்சை எழுந்துள்ளது.
நியூயார்க் நகரைச் சேர்ந்த FBI ஏஜென்ட் ஒருவரின் லேப்-டாப் கம்ப்யூட்டரை ஹக் பண்ணியபோது, 12 பேரின் இலக்கங்களும் கிடைத்தது என்கிறது ஹக்கிங் குரூப்.

இதில் பெரிய தமாஷ், அல்லது உளவுத்துறையை அலற வைத்துள்ள விவகாரம் என்ன தெரியுமா? தாம் தகவல் களவாடிய லேப்-டாப்பின் உரிமையாளரான FBI ஏஜென்டின் பெயரையும் வெளியிட்டுள்ளது அன்டிசெக் ஹக்கிங் குரூப்!

FBI ஏஜென்டின் பெயர் கிரிஸ்டாஃபர் ஸ்டாங்கிள்.
“குறிப்பிட்ட ஏஜென்டின் லேப்-டாப்பில், அந்த அளவுக்கு விபரங்கள் ஏதும் இருக்கவில்லை. இருந்தாலும், இது தொடர்பாக விசாரிக்கிறோம்” என்று கூறிவிட்டு கைகளை பிசைந்தவண்ணம் உள்ளது FBI!
 
Top