அமெரிக்காவில் தற்போது உள்ள பணிகளில், அடுத்த சில வருடங்களில் காணாமல் போய்விடக்கூடிய 10 பணிகளை பட்டியலிட்டு உள்ளார்கள். இவற்றில் ஏதாவது ஒரு ஃபீல்டில் நீங்கள் இருந்தால், வேறு துறைக்கு மாற முடியுமா என்று பாருங்கள். அல்லது, இவற்றில் ஏதாவது ஒரு துறையில் பணிபுரியும் திட்டம் இருந்தால், வேறு தேர்வு உள்ளதா என்று பாருங்கள்.
இதோ 10-வது பணியில் இருந்து ஆரம்பித்து, 1-வது பணி வரை ஒவ்வொன்றாக செல்லலாம். அடுத்தடுத்த பக்கத்துக்கு செல்வதற்கு போட்டோவில் கிளிக் செய்யவும்.
Petroleum Pump System Operators, Refinery Operators and Gaugers
வருடாந்த வீழ்ச்சி வீதம்: -14%2010 பணியிடங்கள்: 44,200
மொத்த பணியிட இழப்பு (2010-2020): -6,200
சராசரி வருட வருமானம்: $60,040
பெற்றோலியம் பம்ப் சிஸ்ட் ஆபரேட்டர்கள், எண்ணை சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிலயங்களில் பணி புரிபவர்கள். இவர்கள், சரியான ஃபுளோவை கவனிப்பதே இவர்களது பிரதான பணி என்பதால், அந்த பணி முற்றிலும் ஆட்டோமேட்டிக் ஆகும்போது, இப்படி ஒரு பணியே இருக்காது. அதேநேரத்தில், இதே துறையில், பெற்றோலியம் இஞ்சினியர்களின் எண்ணிக்கை 17% அதிகரிக்கும்.
Desktop Publishers
வருடாந்த வீழ்ச்சி வீதம்: -14.7%2010 பணியிடங்கள்: 22,600
மொத்த பணியிட இழப்பு (2010-2020): -3,300
சராசரி வருட வருமானம்: $36,610
டெஸ்க்டாப் பப்ளிஷர்கள் பிரசுரிப்பு மற்றும் பத்திரிகை உலக வேலை. பத்திரிகைகள், புத்தகங்கள் அல்லது சஞ்சிகைகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் லே-அவுட் செய்பவர்கள் இவர்கள். இந்த பணியில் மிக வேகமான ஆட்டோமேஷன் நடைபெறுகிறது. பல புதிய புரோகிராம்கள் வெளியாகின்றன. செய்தியாளர்களே தமது செய்திகளை லே-அவுட் செய்ய விரைவில் துவங்கி விடுவார்கள்.
Prepress Technicians and Workers
வருடாந்த வீழ்ச்சி வீதம்: -15.9%2010 பணியிடங்கள்: 50,800
மொத்த பணியிட இழப்பு (2010-2020): -8,100
சராசரி வருட வருமானம்: $36,280
இதுவும் பத்திரிகை துறை பணிதான். பத்திரிகை லே-அவுட் முடிந்தபின், எழுத்துக்கள் மற்றும் படங்களை உரிய இடங்களில் அமைத்து, பிரின்டிங் பிளேட் எடுக்கும் பணி இது. இந்த பணி முழுமையாக இல்லாது போய்விடும். லே-அவுட்டில் இருந்து கம்ப்யூட்டர் மூலமாக நேரே பிரின்டிங்குக்கு போகும் புரோகிராம்கள் பிரபலமாகின்றன.
Coil Winders, Tapers and Finishers
வருடாந்த வீழ்ச்சி வீதம்: -15.9%2010 பணியிடங்கள்: 15,100
மொத்த பணியிட இழப்பு (2010-2020): -2,400
சராசரி வருட வருமானம்: $28,650
இது தொழிற்சாலை வேலை. அசம்பிளிங் மற்றும் ஃபபிரிகேஷன் பணியில் ஈடுபடுபவர்கள் இவர்கள். மெக்கானிகல் மற்றும் எலக்ட்ரிகல் பாகங்களுக்கு காயில் வைன்டிங் செய்யும் பணி இது. இந்த டெக்னாலஜி இல்லாது போகப்போகிறது. காயில் வைன்டிங் இல்லாதபடி, காட்ரிட்ச்கள் வரத் துவங்கிவிட்டன. சில வருடங்களில், காட்ரிட்ச்களே முழுமையான மாற்றீடு செய்யப்பட்டு விடும்.
Textile Machine Setters, Operators and Tenders
வருடாந்த வீழ்ச்சி வீதம்: -16.2%2010 பணியிடங்கள்: 80,300
மொத்த பணியிட இழப்பு (2010-2020): -13,000
சராசரி வருட வருமானம்: $25,010
இவை டெயிலரிங் தொடர்புடைய பெரிதும், சிறிதுமான பணிகள். தையல் எந்திரங்களின் ஆட்டோமேஷன், மற்றும், துணி வெட்டும் டெக்னாலஜியில் மாற்றம் ஆகியவை இந்த பணியை கடுமையாக பாதிக்கப் போகின்றன. பொதுவாகவே துணி தயாரிப்பு தொழிற்சாலைகளில், ஆடை தயாரிப்பு எக்ஸ்டென்ஷன்கள் தற்போது வரத் துவங்கிவிட்டன. அதன் அர்த்தம் என்னவென்றால், தயாரிக்கப்படும் துணி பண்டல்களாக வெளியே வராமல், ஆடைகளாக வெளியே வரும்!
Semiconductor Processors
வருடாந்த வீழ்ச்சி வீதம்: -17.9%2010 பணியிடங்கள்: 21,100
மொத்த பணியிட இழப்பு (2010-2020): -3,800
சராசரி வருட வருமானம்: $33,130
இதுவும் ஒரு தொழிற்சாலை பணிதான். இதுவரை மனிதர்களால் செய்யப்பட்ட இந்த வேலைகளை இப்போது ரோபோக்கள் கவனிக்க துவங்கியுள்ளன. காரணம், இந்த வேலைகள் தொழிற்சாலையின் உற்பத்தி பகுதியில் வைத்து செய்யப்படுவதில்லை. தொழிற்சாலையில் உள்ள கிளீன் அறைகளில் வைத்து செய்யப்படுகின்றன. அதற்கு ரோபோக்களை உபயோகிப்பது சுலபம் என்பதால், சுலபமாக மாற்றீடு செய்யப்பட்டு விடும்.
Communications Equipment Operators
வருடாந்த வீழ்ச்சி வீதம்: -22%2010 பணியிடங்கள்: 164,000
மொத்த பணியிட இழப்பு (2010-2020): -36,100
சராசரி வருட வருமானம்: $25,570
இந்த பணியில் பெரும்பாலும் டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளில் உள்ள பணியிடங்களே அதிகம் இல்லாது போகப் போகின்றன. டெலிபோன் சுவிட்ச் போர்டு ஆபரேட்டர் பணி முற்றிலுமே இல்லாது போய், கம்ப்யூட்டர் மூலம் எக்ஸ்டென்ஷன்களுக்கு கால்கள் செல்லும் நடைமுறை முழுமையாக ஆக்கிரமித்து விடும்.
Shoe and Leather Workers
வருடாந்த வீழ்ச்சி வீதம்: -23.1%2010 பணியிடங்கள்: 13,300
மொத்த பணியிட இழப்பு (2010-2020): -3,100
சராசரி வருட வருமானம்: $23,980
இங்கு குறிப்பிடப்படுவது தயாரிப்பு பணியல்ல, திருத்தும் பணி. ஷூ மற்றும் லெதர் பொருட்களை ரிப்பேர் செய்யும் வேலை முற்றிலும் இல்லாது போய்விடும். காரணம், தற்போதெல்லாம், அவற்றை திருத்தி பயன்படுத்துவதைவிட, புதிதாக வாங்குவது மலிவானது. மிகமிக விலையுயர்ந்த தோல் பொருட்களை திருத்தும் இடம், வரும் காலத்தில், ஒரு நகரத்தில் ஏதோ ஒரு இடத்தில் இயங்கினாலே பெரிய விஷயம்!
Sewing Machine Operators
வருடாந்த வீழ்ச்சி வீதம்: -25.8%2010 பணியிடங்கள்: 163,200
மொத்த பணியிட இழப்பு (2010-2020): -42,100
சராசரி வருட வருமானம்: $20,600
தையல் எந்திரங்களை உபயோகித்து ஆடை தயாரிக்கும் பணி இது. அதாவது, டெயிலர்கள். பாவனையாளர்களை ரெடிமேட் ஆடைகள் முழுமையாக ஆக்கிரமித்து விடும் நாள் வெகு தொலைவில் இல்லை. பாஷன் டிசைனர்களிடம்தான் டெயிலர்கள் பணியில் இருப்பார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
Postal Service Workers
வருடாந்த வீழ்ச்சி வீதம்: -26.4%2010 பணியிடங்கள்: 524,200
மொத்த பணியிட இழப்பு (2010-2020): -138,600
சராசரி வருட வருமானம்: $53,090
தற்போதே தள்ளாடிக் கொண்டிருக்கும் துறை இது. எலக்ட்ரோனிக் மெயில்கள் வந்தபின் சம்பிரதாயமான கடிதங்களுக்கு வேலையில்லை. தவிர, பார்சல் மூலம் பொருட்களை அனுப்புவதிலும், புதிய ட்ராக்கிங் தொழில்நுட்பங்கள் வந்து, அதிக ஆட்கள் தேவையில்லாதபடி செய்துள்ளன. தற்போது அநேக மேலை நாடுகளில் தந்தி சேவை என்றாலே என்னவென்று தெரியாது. அதே நிலைமை, தபால் சேவைக்கும் ஏற்படும்.