தேவையான பொருட்கள்:
2 மே.க எண்ணெய்
1 சிவப்பு வெங்காயம் சிறிதாக நறுக்கி
1 ஆரஞ்சு குடமிளகாய் சிறிதாக நறுக்கி
1 பச்சை குடமிளகாய் சிறிதாக நறுக்கி
1 கப் இளம் சோளம் (baby corn)  டின்னில் அடைத்தது.
1/2 கிலோ ச(ல்)மன் பிளே (salmon fillet)
1 மே.க பப்பிரிக்கா
8 அவுன்ஸ் அன்னாசி டின்.
1 கப் முளை பயறு (bean sprouts)
2 மே.க கெச்சப் (tomato Ketchup)
2 மே.க சோயா சோஸ்
2 மே.க செரி வைன் (sherry)
1 மே.க சோள மா (corn starch)

 சல்மன் பிளே உடன் சிவப்பு வைன் மிகவும் சுவையாக இருக்கும்.



செய்முறை:
இளம் சோளத்தை, பாதியாக வெட்டவும். எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம், குடமிளகாய், வெட்டப்பட்ட இளம் சோளம் என்பவற்றை போட்டு, 5 நிமிடங்கள் கிளறி பொரிய விடவும்.
ச(ல்)மன் பிளேயை குளிர்மையான நீரில் கழுவி, பேப்பர் டவலால் துடைத்து உலரப் பண்ணவும்.
ச(ல்)மன் பிளேயை மெல்லிய துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு பப்பிறிக்காவைத் தூவி, நன்கு கலக்கி வைத்திருக்கவும்.
தற்போது, சமையல் பாத்திரத்தில் ச(ல்)மன் துண்டுகளையும், அன்னாசி துண்டுகளையும் போட்டு, 2 முதல், 3 நிமிடங்கள் பொரிய விடவும், அல்லது மீன்துண்டங்கள் நன்கு வேகும்வரை  காத்திருக்கவும்.
அதன்பின் பொரிந்து கொண்டிருக்கும் மீனின்மீது முளை பயறை போட்டு கிளறவும்.
மற்றொரு சிறிய பாத்திரத்தில் கெச்சப், சோயாசோஸ், சோளமா, செரி வைன் என்பவற்றை போட்டு நன்கு கலக்கி, அதை சமையல் பாத்திரத்திலிட்டு கலக்கி விடவும். திரவம் தடித்து வரும்வரை அளவான சூட்டில் விட்டு, இறக்கவும்.
அநேக மேலைநாட்டு பெரிய ரெஸ்ட்டாரன்ட்களில் பரிமாறப்படும் விலை அதிகமான டிஷ் இது. ச(ல்)மன் பிளேயை பரிமாறும்போது வெள்ளை வைன் கொடுப்பதைத் தவிர்க்கவும். ரெட் வைன்தான் இதற்குப் பொருத்தமாகவும், சுவையாகவும் இருக்கும்.
 
Top