போராட்டம் நடத்தியவர்களே, புகைக்குண்டு, கண்ணீர் புகை குண்டு எல்லாவற்றையும் வீசினார்கள். ஏன் தெரியுமா? போராட்டம் நடத்தியவர்கள், ஸ்பெயின் நாட்டு தீயணைப்பு படையினர், பாதுகாப்புதுறை மற்றும் ராணுவத்தினர்! ஊதிய அதிகரிப்புக்காக இவர்கள் போராடுகிறார்கள்.
போராட்டத்தை அடக்க வேண்டியவர்களே, போராட்டம் நடத்தும் வித்தியாசமான சூழ்நிலை!
சுவிட்சலாந்து, சார்மி நகரில் எடுக்கப்பட்ட போட்டோ. வீதியில் மாடு போவது, நம்மூர் வீதிகளில் சாதாரணமாக காணக்கூடிய காட்சிதான். ஆனால், சுவிஸ்ஸில் சாதாரண காட்சியல்ல.
சுவிஸ்ஸில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை இது. இலையுதிர் காலத்தை வரவேற்க, அல்பைன் கிளைமேட்டை (Alpine climate) நோக்கி கால்நடைகளை அலங்கரித்து அழைத்துச் செல்லும் பண்டிகை இது. சுருக்கமாக சொன்னால், சுவிஸ் நாட்டு மாட்டுப் பொங்கல்!
ஸ்பெயின் வலன்சியாவில் எடுக்கப்பட்ட போட்டோ. கடுமையான புயல் அடித்த காரணத்தால், சாலெர் பீச்சில் ஒதுங்கிய கார்கோ கப்பலை வேடிக்கை பார்க்கும் மக்கள். புயல் காரணமாக கரைக்கு மிக அருகில் வந்துவிட்ட கப்பல் மண்ணில் புதைந்து விட்டது. கப்பலில் உள்ள பொருட்களை இறக்கியபின், கடலுக்கு இழுத்துச் செல்ல வேண்டும். அது சுலபமாக இருக்கப் போவதில்லை.
மெக்சிகோ, மெக்சிகோ சிட்டி நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. நடுவே பாஸ்க்கெட்டில் உள்ளது, சோளம். Dia Nacional del Maiz கொண்டாட்டங்களின்போது, உடலில் கருப்பு பெயின்ட் அடித்துக்கொண்ட மக்கள் சோளத்தை எடுத்துச் செல்கிறார்கள். Dia Nacional del Maiz என்ற ஸ்பானிஷ் சொல்தொடரின் அர்த்தம், தேசிய சோளம் தினம்!
பிரான்ஸ், பாரிஸில் எடுக்கப்பட்ட போட்டோ. பேஷன் ஷோ ‘Ready-to-wear spring-summer 2013’ மாடல்களின் அணிவகுப்பு இது. சீன பேஷன் டிசைனர்கள் டாவி சன், லிங் லியூ டிசைன் செய்த காஸ்ட்யூம்களை இந்த மாடல்கள் அணிந்துள்ளனர்.
டிரெஸ் மேக்கிங்கில், சைனீஸ் ஃபிளேவர் தூக்கலாக உள்ளது அல்லவா
மியன்மார், குச்சின்னில் எடுக்கப்பட்ட போட்டோ. All Burma Students Democratic Front அமைப்பை சேர்ந்த ‘மாணவர் ராணுவ படையினர்’ இவர்கள். ஸ்கூல் செல்லும் வயதில் துப்பாக்கி தூக்கும் கலாசாரம் இது!
அமெரிக்கா, மெடினாவில் எடுக்கப்பட்ட போட்டோ இது. ரைடர் கிளப்பில் நடைபெற்ற காலை மேட்ச்களை பார்க்க வந்துள்ள பிரிட்டிஷ் ஆதரவாளர்கள். அதற்குள் போய் கலந்துவிட்ட அமெரிக்க ஆதரவாளர் ஒருவரும் போட்டோவில் உள்ளதை பாருங்கள்.
பஹ்ரெய்ன், சனாபிஸ்ஸில் எடுக்கப்பட்ட போட்டோ இது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் இங்கு இன்னமும் ஓயவில்லை. கையில் பெற்றோல் குண்டு ஒன்றை வைத்துக்கொண்டு, கலவர போலீஸை நோக்கி எறிய தயாராகும் போராட்டக்காரரை இதில் காணலாம்.
வெனிசூலா, கராகஸ் நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. ஜனாதிபதி ஹூகோ சாவெஸில் நிலைமையை பார்த்தீர்களா? ஜனாதிபதியின் ராட்சத உருவ பொம்மை ஒன்றை நடமாடவிட்டு, பிரசாரம் செய்கிறார்கள். இங்கு ஜனாதிபதி தேர்தல், வரும் 7-ம் தேதி நடக்கவுள்ளது.
நம்ம கேப்டனை பார்த்துவிட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிரண்டு ஓடுவதுபோல, ஜனாதிபதி உருவத்தைப் பார்த்துவிட்டு குழந்தைகள் மிரண்டு ஓடுகின்றனவே… ஜெயிப்பாரா?
மெக்சிகோ, ஓக்ஸாகாவில் எடுக்கப்பட்ட போட்டோ இது. சிறிய உருவங்களாக தெரிபவை, இளம் ஆமைகள். தமத கடல் வளத்தை பாதுகாக்க மெக்சிகோ அரசு இந்த சீசனில் ஆமை முட்டைகளுக்கு செயற்கையாக வெப்பம் கொடுத்து, ஆமைகளை உருவாக்குகிறது. இதற்காகவுள்ள சிறப்பு வலைகளில் இவற்றை எடுத்துச் சென்று கடலில் விடும் பணி, மெக்சிகோ கடற்படையை சார்ந்தது!
பஹ்ரெயின், சதாத் கிராமத்தில் எடுக்கப்பட்ட போட்டோ இது. நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ள காட்சி இது. பஹ்ரெயினில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் கிராமங்கள் வரை பரவத் தொடங்கியுள்ளன.
நைஜீரியா, இடா பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ இது. இடா என்பது கடற்கரைப் பகுதி. இங்கு நேற்று முன்தினம் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதையடுத்து நைஜீரிய வரலாற்றிலேயே மிக மோசமான வெள்ளப்பெருக்கை சந்தித்தது இடா பகுதி.
அங்கிருந்து 10,000 மக்கள் குடிபெயர்ந்து, நாட்டின் மத்திய மாகாணம் கோகிக்கு வந்துள்ளனர். அப்படி வந்தவர்களில் சிலரை கிளிக் செய்த போட்டோ இது..
ரஷ்யா, மாஸ்கோவில் எடுக்கப்பட்ட போட்டோ இது. ஆஹா! தங்கப் பெண்! இங்கு நடைபெற்ற ‘பாடி ஆர்ட் நைட்’டின்போது, உடல் முழுவதும் தங்க வர்ணம் அடிக்கப்பட்ட நிலையில் அலங்கரிக்கப்பட்ட மாடல் இவர்.
பங்களாதேஷ், டாக்காவில் எடுக்கப்பட்ட போட்டோ இது. மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதற்கு, கலவர போலீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. கலவரப் போலீஸ் ஆக்ஷனில் ஈடுபட்ட காட்சியை பாருங்கள். தமிழக அரசும், விரைவில் மின கட்டணங்களை உயர்த்தலாம் என ஒரு கதை உலாவுகிறது!
அமெரிக்கா, ஹன்டிங்டன் (கலிபோர்னியா) கடற்கரையில் எடுக்கப்பட்ட போட்டோ இது. வளர்ப்பு நாய்களுக்கான வருடாந்த சர்ஃப் போட்டியில், 4 வயது நிரம்பிய ஹான்சோ என்ற நாய் அலைகளில் கர்ஃப் பண்ணுவதை பாருங்கள். ஹான்சோவுக்கு ஸ்கேட் போர்டில் பயிற்சி கொடுக்க தொடங்கியபோது அதற்கு வயது, 10 வாரங்கள்!
ஆப்கானிஸ்தான், ஜலாலாபாத்தில் எடுக்கப்பட்ட போட்டோ இது. குழந்தைகள் விளையாடும் இடத்தில் உள்ள இந்த டாங்கி, ரொம்ம பழையது. சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த காலத்தில் விட்டுச் சென்றது. இந்த மாடல் டாங்கி இப்போது ரஷ்யாவில் இருப்பதே சந்தேகம்.
கீழேயுள்ள போட்டோவில் இருப்பது, முன்னேற்றம் அடையாக மூன்றாம் உலக நாடு ஒன்றில் உள்ள ரயில்வே பாலம் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அமெரிக்கா, சிக்காகோவில் எடுக்கப்பட்ட போட்டோ இது. சிக்காகோ ஆற்றில், பிங் டாம் மெமோரியல் பார்க் அருகே உள்ளது இந்த துருப்பிடித்த பாலம். இன்றும் மெட்ரோ ரயில் செல்லும் பாதை இது!
ஜப்பான், டோக்கியோவில் எடுக்கப்பட்ட போட்டோ இது. டோக்கியோ புறநகர பகுதியில் உள்ள டிஸ்னிலேன்டில் உள்ள சின்ட்ரெல்லா மாளிகையின் பால்கனியில் நின்று கையசைக்கும் புதுமண தம்பதிகள், மயூமி ககோஷி, டகாயூகி அபிகோ.
டோக்கியோ டிஸ்னிலேன்ட்டில் நடைபெற்ற முதல் திருமணம் என்பதால், மயூமி, டகாயூகி திருமணம், ஜப்பானிய ஊடகங்களால் கவர் செய்யப்பட்டது.
காசா, ராஃபாவில் எடுக்கப்பட்ட போட்டோ இது. “இந்த நபர் கிணற்றுக்குள் இருந்து ஏறுகிறார். இதில் என்ன முக்கியத்துவம் உள்ளது?” என்றுதானே நினைக்கிறீர்கள்? அவசரம் வேண்டாம், இது வேறு விவகாரம். இந்த இடம் காசா-எகிப்து எல்லையில் உள்ளது. போட்டோவில் தெரிவது, கிணறு அல்ல, எகிப்துக்கு செல்லும் சுரங்கப் பாதை.
கடத்தல்காரர்கள், இரு நாடுகளுக்கும் இடையே பொருட்களை (ஆயுதங்களையும்தான்) கடத்தும் இப்படியான 30 சுரங்கப் பாதைகளை எகிப்து ராணுவம் ஞாயிற்றுக்கிழமை குண்டுவைத்து தகர்த்தது. அப்படியிருந்தும், சில சுரங்கங்கள் மீதமுள்ளன.
பாரிஸ், பிரான்ஸில் எடுக்கப்பட்ட போட்டோ இது. முகமூடி அணிந்த பிரெஞ்சு பெண்கள் போராடுவது, ரஷ்ய பங் பேன்ட் பெண்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து.
ரஷ்ய பெண்கள் பேன்ட் இதுபோலவே முகமூடி அணிந்து ரஷ்ய அரசுக்கும், பூட்டினுக்கும் எதிரான பாடல்களை பாடிய காரணத்தால், கைது செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
மெக்சிகோ, ட்லக்ஸ்காலாவில் எடுக்கப்பட்ட போட்டோ.
எரிமலை வெடிக்கப் போவதற்குமுன், புகையும் காட்சி இது. ட்லக்ஸ்காலா
பகுதியில் உள்ள அனைவரும் நேற்று அதிகாலை அவசரகதியில்
வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனா, ஹாங்காங்கில் நேற்று
எடுக்கப்பட்ட போட்டோ. இரு சிறு கப்பல்கள் நேற்று காலை மோதிக்கொண்டபோது,
பெரிய விபத்து ஏற்பட்டது. இரு கப்பல்களிலுமாக சேர்த்து சுமார் 100 பேர்
இருந்ததாக, நேற்று மாலை ஹாங்காங் ரேடியோ தெரிவித்தது. விபத்து
நடைபெற்றபோது, பலர் கடலில் வீழ்ந்தனர். அவர்களை காப்பாற்றும் மீட்பு
நடவடிக்கைகள் நேற்றிரவு எடுக்கப்பட்டபோது கிளிக் செய்யப்பட்ட போட்டோ இது.
சீனா, தியான்ஜின் பகுதியில்
எடுக்கப்பட்ட போட்டோ இது. பீய்ஜிங் – தியான்ஜின் வீதியில் டூரிஸ்ட் பஸ்
ஒன்றும், ட்ரக் ஒன்றும் மோதிக்கொண்டபோது, டூரிஸ்ட் பஸ் தீப்பிடித்தது.
அதில் பயணம் செய்த 6 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஐவர், ஜெர்மன்
நாட்டவர்கள். மேலும் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டனர். பஸ் முழுமையாக எரிந்து போனது.
உக்ரேன் கியிவ் நகரில்
எடுக்கப்பட்ட போட்டோ. பத்திரிகையாளர்கள் நடத்திய போராட்டம் இது. உக்ரேன்
அரசு ஊடக தணிக்கை முறையை அமல் படுத்தி, அதை மீறும் பத்திரிகையாளர்களுக்கு
சிறைத் தண்டனை என அறிவித்துள்ளது.
“ஊடக தணிக்கை அமல் படுத்தப்பட்டால், நாம் பத்திரிகைகளை இப்படி வெற்று காகிதமாகவே வெளியிட முடியும்” என வெற்றுக் காகிதங்களுடன் போராட்டம் நடத்தும் உக்ரேன் பத்திரிகையாளர்கள் இவர்கள்.
“ஊடக தணிக்கை அமல் படுத்தப்பட்டால், நாம் பத்திரிகைகளை இப்படி வெற்று காகிதமாகவே வெளியிட முடியும்” என வெற்றுக் காகிதங்களுடன் போராட்டம் நடத்தும் உக்ரேன் பத்திரிகையாளர்கள் இவர்கள்.
ரஷ்யா, மாஸ்கோவில் எடுக்கப்பட்ட
போட்டோ இது. ரஷ்ய பிரதமர் திமொதி மெட்வெடெவ்வுடன் கை குலுக்குபவர்,
பேஸ்புக் அதிபர் மார்க் ஸூக்கர்பெர்க்! மார்க், ரஷ்யாவின் அழைப்பை ஏற்று
இரண்டு நாள் விஜயமாக மாஸ்கோ வந்திருந்தார். கிட்டத்தட்ட ஒரு வெளிநாட்டு
தலைவருக்கு வழங்கப்படும் சிறப்பு வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டது.