முல்லா
ஒருநாள் தன் கிராமத்தில் இருந்த ஒரு கடைக்கு சாமான்கள் வாங்கச்
சென்றார்.கடை வாசலில் தன் கழுதையை நிறுத்திவிட்டு அவர் உள்ளே
சென்றார்.திரும்ப வந்து பார்த்தபோது யாரோ அவருடைய கழுதையின் மீது சிவப்பு
வண்ண பெயிண்டை அடித்து வைத்திருந்தார்கள்.
அதைப் பார்த்ததும் அவருக்கு பயங்கரமான கோபம் வந்து விட்டது.அவர் சப்தம் போட்டு,''யார் என் கழுதைக்கு இப்படி பெயின்ட் அடித்தது?இன்று அவனைக் கொல்லாமல் விட மாட்டேன்.''என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன்,''யாரோ ஒரு புதியவர் கழுதையின் மீது பெயின்ட் அடித்துவிட்டு இப்போதுதான் அந்த மதுக் கடைக்குள் சென்றார்,''என்றான்.முல்லாவ ும்
மதுக்கடைக்குள் சென்று,
''யார் என் கழுதையின் மீது பெயின்ட் அடித்தது?''என்று ஆத்திரத்துடன் கேட்டார்.ஒரு வாட்டசாட்டமான ஆள் ஒருவர் முன் வந்து,''நான்தான் அடித்தேன்.இப்போது என்ன செய்யப் போகிறாய்?''என்று இளக்காரமாகக் கேட்டார்.அந்த ஆளின் புஜ பலத்தைப் பார்த்தவுடன் அரண்டு போன முல்லா ,''ஹி,ஹி...நீங்கள்தானா.வேற ஒன்றுமில்லை,கழுதையின் மீது நீங்கள் அடித்த முதல் பெயின்ட் காய்ந்து
உலர்ந்துவிட்டது.எனவே நீங்கள் வந்து அடுத்த கோட் பெயின்ட் அடிக்கலாம்
என்பதைச் சொல்ல வந்தேன்.''என்று வழிந்தார்.
அதைப் பார்த்ததும் அவருக்கு பயங்கரமான கோபம் வந்து விட்டது.அவர் சப்தம் போட்டு,''யார் என் கழுதைக்கு இப்படி பெயின்ட் அடித்தது?இன்று அவனைக் கொல்லாமல் விட மாட்டேன்.''என்று ஆர்ப்பாட்டம் செய்தார்.அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன்,''யாரோ ஒரு புதியவர் கழுதையின் மீது பெயின்ட் அடித்துவிட்டு இப்போதுதான் அந்த மதுக் கடைக்குள் சென்றார்,''என்றான்.முல்லாவ
''யார் என் கழுதையின் மீது பெயின்ட் அடித்தது?''என்று ஆத்திரத்துடன் கேட்டார்.ஒரு வாட்டசாட்டமான ஆள் ஒருவர் முன் வந்து,''நான்தான் அடித்தேன்.இப்போது என்ன செய்யப் போகிறாய்?''என்று இளக்காரமாகக் கேட்டார்.அந்த ஆளின் புஜ பலத்தைப் பார்த்தவுடன் அரண்டு போன முல்லா ,''ஹி,ஹி...நீங்கள்தானா.வேற
இப்படித்தான்,நாம்
ஒவ்வொருவரும். நாம் பலசாலியாக இருந்தால் சண்டைக்கு தயாராகி
விடுகிறோம்.எதிரி பலசாலியாக இருந்தால் அங்கு நம் கோபம் செல்லுபடி
ஆவதில்லை.நாம் பயந்து சரண் அடைந்து விடுகிறோம்.