Latest News

மண முறிவு ஏற்படும்போது (அதாங்க விவாகரத்து நடக்கும்போது), சீர்வரிசைகளை எல்லாம் திரும்பப் பெற்றுக்கொள்வது மதுரை மாவட்டம் பக்கம் இப்போதும் நடைமுறையில் இருக்கிற ஒரு வழக்கம்.


இதே பாணியில், ‘மன முறிவு’ ஏற்பட்டுவிட்ட நித்தியானந்தா, மதுரை ஆதீனத்திடம் என்னென்ன சீர்வரிசைகளைத் திரும்பக் கேட்பார்? ஒரு கற்பனை.

ஆதீனம் நித்திக்குக் கொடுக்க வேண்டியவை:

தங்க முலாம் பூசிய அரியணை-2,
மெத்தை,
தலையணையுடன் கூடிய அரியணை-1,
ஃபோர்டு எண்டேவர் கார்-1,
தங்கக் கிரீடம்,
சொர்ணா பிஷேகம் செய்த தங்கக் காசுகள்-50,
செங்கோல்-1,
ஞானப் பால் மேக்கர்-1,
பழச் சாறு பிழியும் கருவி-1,
ஏ.சி. மெஷின்கள் -4,
தையல் மெஷின்-1,
லேப்டாப்-1,
எல்.இ.டி. டி.வி.-2,
டச் ஸ்க்ரீன் மொபைல்-1,
கண் காணிப்பு கேமரா – 2,
வயர்லெஸ் மைக்-1,
ஜெனரேட்டர்-1,
அன்ன தான சமையல் பாத்திரங்கள்-4,
கரண்டிகள்-4,
பணிவிடைப் பெண்கள்-4,
மொட்டை சீடர்கள்-5,
ஆதீனத்தைப் புதுப்பிக்க ஆன செலவு உள்பட ரொக்கம் சுமார் 50 லட்சம்
 
Top