நாம் பார்க்க போவது - பெற்றோர்களின் ஈகோ வார்ஸ் (Parent's EGO WARS). பெற்றோருக்கு ஈகோவா இது என்ன என்று நினைப்பவர்களுக்கு பெற்ற உடன் அடுத்த கவலையான பள்ளீ படிப்பை பற்றி தான் நாம் பேசபோகிறோம்.

அந்த கால எட்டாம் கிளாஸ், நான் பியூசி யாக்கும், நான் பி ஏ பட்டதாரி என மார்தட்டி கொண்ட தந்தையர் ஜெனரேஷ்ன்கள் இன்று டபுள் பி ஹெச் டி வைத்திருந்தால் கூட ஓஹோ ஒகே என்னும் சொல்லும் அளவுக்கு கல்வி தரம் தாழ்ந்துவிட்டது என்றால் மிகையல்ல.

எல்லா வளர்ந்த பிரச்சினைக்கும் அடித்தள விஷயம் தான் ஆக பெரிய பிரச்சினையாக இருக்கும். அப்படி ஆரம்பிக்கும் கல்வி பிரச்சினை தான் இந்த பெற்றோர்களின் ஈகோவால் கஷ்டபடுவது நம் குழந்தைகள் தான். பிறந்து சரியா எழுந்து கூட நடக்க தெரியாத குழந்தையை கொண்டு கிர்ஷ் என்னும் பகல்ல மாற்றான் தாயிடம் புட்டி பாலை குடிக்க வைக்க சொளையாக சில ஆயிரம் ரூபாய் தர தயாராய் இருக்கும் மர்மம் ஈகோ தான். அவ பிள்ளை போறான் கிர்ஷ், அவன் பிள்ளை போறான் ப்ளே ஸ்கூல், அவன் பிள்ளை போறான் சம்மர் கோச்சிங்னு ஊசி துவாரத்தில் ஒட்டகத்தை நுழைத்த கதை தான் நம்ம பிள்ளைகளுக்கு.
 
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் உங்கள் தாய் தந்தையர் எவ்வளவு பேர் ப்ளே ஸ்கூல், கிர்ச், ப்ரீ கேஜி படித்தார்கள் என்று ஆனால் அதே சமயம் உங்கள் வீட்டில் தற்போது இதை படிக்காத பிள்ளைகள் யாராவது உண்டா என்றால் இரண்டிற்க்கும் பதில் " நோ " தான் பதில்.

குழந்தைகளை குரங்காட்டி போல் தான் ஆட்டிவிக்கிறோம், இங்க ஆடுறா ராமா, இங்க பாடுறா ராமா, இங்க அபாகஸ் படிடா ராமா, இங்கே குளிடா ராமா எப்பா எவ்வளவு ஆசைகள் நம்மின் பெற்றோருக்கு. முக்கால் வாசி குழ்ந்தைகள் இன்று நோஞ்சான் அல்லது சிக் ப்ரோன் பேபியாய் உருவாக்க காரணமே இந்த ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பெற்றோர்தான். பத்து மாசம் சுமக்கும் ஒரு பாரம்பர்ய பழக்கம் இன்று என்னவோ ஆயுள் தண்டனை போன்று உணருகிறார்கள். பிரசவத்திற்க்கு நாள் நட்சத்திரம் என குறித்து ஆவி பறக்க போன்டோவை சுடுவது போல் இன்று நினைத்த நேரத்தில் அறுத்து எடுக்கிறார்கள் குழந்தைகளை. தாய் பால் இன்னொரு பெரிய சோகம் இதெல்லாம் முடிந்து ஒரு குழ்ந்தையின் குறைபாடு சரியாக தெரியும் வயது 3 - 5 தான். 
 
அதை மனதில் கொள்ளமல் ஆஸ்மா ப்ரோன் குழந்தைகளை நீச்சல் கிளாஸில் சேர்ப்பது, மஸில் வீக்னெஸ் குழந்தைகளை கராத்தே கிளாஸில் சேர்ப்பது என்று கொஞ்சமும் ஒவ்வாத விஷயத்தி தினித்து அப்புறம் வாரம் இரு முறை பீடியாட்ரியேஷனிடம் தஞ்சம் புகுகிறோம். என் அடித்தளம் 2 வயது வரை தாய்ப்பால், அடுத்த 2 வருடம் கேப்பை கையில் அரைத்து அந்த பால் வாரம் ஒரு முரை சுக்கு தண்ணீர் மாதம் ஒரு முறை கண்களில் வெங்காய சாறு என அஸ்திவாரம் போட்ட காரணத்தினால் இன்றோடு உடம்புக்கு முடியலைன்னு மருத்தவமனைக்கு போய் 18 வருடங்கள் என்றால் உண்மையும் அது தான். 
கொஞ்சம் பல் முளைச்ச பிறகு பருப்பை தனியா எடுத்து வைத்து அதை நெய் சேர்த்து மசித்து கொடுக்கும் சாப்பாட்டை விட எந்த உணவில் புரட்டீன், கார்போ மற்று அத்தனை மினரல்களும் இல்லாமல் இல்லை. இதை விட்டு அமிர்தாஞ்சன் புட்டி போல வரும் கர் புர் உணவு தான் இப்போ பேபிஸுக்கு. நாய் பூனைக்கு இன்னொரு பாக்கெட் உணவுன்னு எல்லாமே பூட்டி பாக்கெட் மயம் ஆகிபோச்சு. அந்த கெர்பர் சமீபத்தில ஒரு அதிர்ச்சி தகவல் சொல்லீச்சு ஒரு பேச்சுல கண்ணாடி சில்லுகள் வேற இருந்ததாம். ஒரு காலத்தில பேரக்ஸ் கூட குடுத்த ஜீரன சக்தி சரியா அமையாதுன்னு சாதத்தை கையில் மசிச்சு இடுப்புல வச்சு அப்படியே சோறும் ஊட்டின மாதிரி அதே சமயம் இடுப்பில் வைத்திருப்பதால் அந்த குழந்தையின் இடுப்பு பலம் மற்றும் ஜீரன் சக்தியை 30 நிமிடம் நிலாவையும் பூச்சான்டியையும் என்னை போல் பக்கத்து வீட்டு சாப்பாட்டு ராமன் மாமா நீ சாப்பிடைலைனா எல்லாத்தையும் சாப்பிட்டுருவான்னு சொன்ன காலங்கள் வரலாறு ஆகி போனது தான் சோகம்.

இதுக்கு அடுத்து எல்கேஜி அட்மிஷன் அதுக்கு நாய் பேயா லைனில் நின்னு இன்டர்வியூக்கு போய் கையூட்டை டெவலப்மென்ட் ஃபன்டாக கொடுத்து குறைகளுக்கு ஏற்றவாறு கேப்பிடேஷன் செலுத்தி படிக்க வைக்கும் கொடுமை நம்ம ஊரில் தான். என் பையன் இங்கிலிபீஸ் ஸ்கூல் படிக்கிறான்னு இட்லி சுட்டு விக்கும் அக்கா கூட சொல்வதை பார்த்தால் டேய் எப்பா உங்க பிள்ளைகள் அனைவரும் +2 முடிச்ச பிறகு கார்ப்ரேஷன் ஸ்கூல் படிச்ச பிள்ளைகளும் உங்க இங்காலிபீஸ் பிள்ளைகளும் ஒரே பாடம் தானே கல்லூரியில் படிக்க போகிறார்கள். 15 வருட படிப்பு காஸ்ட்டை சேர்த்து வைத்திருந்தால் ஆண் பிள்ளைகளுக்கு மேல் படிப்பு அல்லது ஃபாரின் எஜுகேஷன் கொடுத்திருக்கலாம், பெண் பிள்ளைகளுக்கு ஒரு கனிசமான தொகையாகவோ அல்லது நகையாகவோ சேமித்திருக்க முடியும். 
 
எல்லா டாக்டரும் எல்லா வக்கீலும் எல்லா என்ஞினியரும் ஆதர்ஸ்ல படிச்சவங்க இல்லைபா - பெற்றோரகளே இப்ப சமச்சீர்னு வேற ஆயிடுச்சு இப்பவும் திருந்தாமே ரேஷன் அரிசி சோற்றை ஃபைவ்ஸ்டார் ஹோட்டல்ல தான் சாப்பிடுவேன்னு சொன்ன வினை தான் தமிழ் நாட்டுல 27,000 பொறியல் இடங்கள் காலியாக காத்து வாங்குது. ரஷியால, இந்தோனேஷியா சைனால டாக்டர் படிக்க வைக்கும் ஓவர் ஈகோ பெற்றோர் இதற்க்கு மயில் படம் போட்டு டுபாக்கூர் டிகிரி சர்டிஃபிக்கட் காசு கொடுத்து வாங்கி கொடுத்திடலாம். 
 
சிந்தியுங்கள் குழந்தை ஒரு வரம் - ஆனால் அவர்களை சாபக்கேடாக்கதீர்.
 
Top