Photo: ஆடுபுலி ஆட்டம்
ஆடவரால்     விளையாடப்படும் வரைபட ஆட்டம் ஆடுபுலி
ஆட்டம் ஆகும். இது பதினைந்தாம் புள்ளி என்றும்
வழங்கப்படும். அறிவுத் திறனை வளர்க்கக் கூடிய இந்த
விளையாட்டிற்கு இருவர் வேண்டும்.
ஒருவர்     ஆடுகளின் சார்பாகவும், ஒருவர் புலியின் சார்பாகவும்
விளையாட வேண்டும். மண் தரையிலோ அல்லது கல், சாந்துத்
தரையிலோ ஆட்டத்திற்குரிய வரைபடத்தை வரைந்து கொள்ள
வேண்டும். ஆடுகளின் சார்பாக விளையாடுபவர் பதினைந்து
காய்களையும் (கற்கள் அல்லது புளியங் கொட்டை) புலியின் சார்பாக
விளையாடுபவர் மூன்று காய்களையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது     ஆடுகளுக்குரிய காய்களை வைத்துக் கொண்டே
வரவேண்டும். அப்பொழுது புலி ஆடுகளி்ன் இருப்பு முறைக்கேற்ப
நகர்ந்து கொண்டும் ஆடுகளை வெட்டிக் கொண்டும் வரும். புலி நகர
முடியாத அளவிற்கு ஆடுகள் சுற்றி வளைத்துக் கொண்டால் புலி
தோற்றதாகக் கருதப்படும். ஆடுகள் அனைத்தையும் புலி
வெட்டிவிட்டால் புலி வெற்றி பெற்றதாகக் கருதப்படும். ஆடுவோரின்
திறமையைப் பொறுத்து ஆட்டத்தின் காலம் நீளும்.
அறிவுக்     கூர்மைக்கும் சிந்தனையை ஒருமுகப் படுத்துவதற்கும்
இவ்விளையாட்டு சிறந்த பயிற்சியாகும். இந்தோனேசியா, இலங்கை,
மலேசியா போன்ற நாடுகளிலும் இவ்விளையாட்டு உள்ளது குறிப்பிடத்
தக்கதாகும்.

நன்றி http://kamaru123.blogspot.in
ஆடவரால் விளையாடப்படும் வரைபட ஆட்டம் ஆடுபுலி
ஆட்டம் ஆகும். இது பதினைந்தாம் புள்ளி என்றும்
வழங்கப்படும். அறிவுத் திறனை வளர்க்கக் கூடிய இந்த
விளையாட்டிற்கு இருவர் வேண்டும்.
ஒருவர் ஆடுகளின் சார்பாகவும், ஒருவர் புலியின் சா
ர்பாகவும் விளையாட வேண்டும். மண் தரையிலோ அல்லது கல், சாந்துத்
தரையிலோ ஆட்டத்திற்குரிய வரைபடத்தை வரைந்து கொள்ள
வேண்டும். ஆடுகளின் சார்பாக விளையாடுபவர் பதினைந்து
காய்களையும் (கற்கள் அல்லது புளியங் கொட்டை) புலியின் சார்பாக
விளையாடுபவர் மூன்று காய்களையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
இப்பொழுது ஆடுகளுக்குரிய காய்களை வைத்துக் கொண்டே
வரவேண்டும். அப்பொழுது புலி ஆடுகளி்ன் இருப்பு முறைக்கேற்ப
நகர்ந்து கொண்டும் ஆடுகளை வெட்டிக் கொண்டும் வரும். புலி நகர
முடியாத அளவிற்கு ஆடுகள் சுற்றி வளைத்துக் கொண்டால் புலி
தோற்றதாகக் கருதப்படும். 
 
ஆடுகள் அனைத்தையும் புலி வெட்டிவிட்டால் புலி வெற்றி பெற்றதாகக் கருதப்படும். ஆடுவோரின் திறமையைப் பொறுத்து ஆட்டத்தின் காலம் நீளும்.

Top