தரையடியே ஆடம்பர இருப்பிடம் ஒன்றை அமைத்துள்ளார், அமெரிக்கா, கலிபோர்னியாவை சேர்ந்த ஒருவர்.

“உலகம் அழிவது என்பதற்காக அல்ல, நாளையே ஊலக யுத்தம் தொடங்கலாம், வட கொரிய ஏவுகணை அமெரிக்கா மீது வந்து விழலாம். அப்படியான நேரத்திலும் பாதுகாப்பாக இருக்க இது உபயோகப்படும்” என்கிறார், ரான் ஹபார்ட். கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ளது, இவரது தரையடி ஆடம்பர இருப்பிடம்.
“இது வீடு மட்டுமல்ல, ‘luxurious underground bomb-proof shelter’ என்கிறார், அவர்.
“எனது குடும்பத்துக்காகவே முதலில் இப்படி ஒன்றை உருவாக்க நினைத்தேன். உருவாக்கியபோது, இதில் உள்ள பிசினெஸ் ஆப்பர்சூனிடி என்னை மலைக்க வைத்தது. இதற்கு பணம் கொட்டிக்கொடுக்க எத்தனை பேர் தயாராக உள்ளார்கள் என்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள்” என்கிறார், ரான் ஹபார்ட்.

தற்போது இவர் இப்படியான தரையடை ஷெல்டர்களை பெரிதும், சிறிதுமாக தயாரிக்கிறார். பெரிய ஆடம்பர ஷெல்டரில் இருந்து, சிறிய, சாதாரண ஷெல்டர் வரை தயாரித்து விற்கிறார். ஆரம்பத்தில் மாதம் ஒன்று என நடைபெற்ற விற்பனை, தற்போது தினத்துக்கு ஒன்று என்ற அளவில் எகிறியுள்ளது! சராசரி விலை, சுமார் 75,000 டாலர்.

“பங்கர் வெடிகுண்டு, கெமிகல் வெடிகுண்டுகள் மட்டுமல்ல, அணுகுண்டு போட்டாலும் இதற்கு உள்ளே இருந்தால் பாதுகாப்பானது” என்கிறார்.
ஆடம்பர ஷெல்டரில், வசதியான வீடு ஒன்றில் உள்ளதுபோல, லிவிங் ரூம், பெட் ரூம், கிச்சன் என்று ஆரம்பித்து, பொழுதுபோக்கு ரூம் வரை உள்ளது. கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தரையடி ஆடம்பர இருப்பிடத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை தருகிறோம், பாருங்கள்.

கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள தரையடி ஆடம்பர இருப்பிடத்தில், குழந்தைகள் தமது பங்க் பெட்களில் படுத்து செக் பண்ணுகிறார்கள்.
survival-bunkers-20121220-01

கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள தரையடி ஆடம்பர இருப்பிடத்தில், கிச்சனும், அதையடுத்த பேமிலி ரூம், பிளாஸ்மா டி.வி.யுடன் கூடிய சிட்டிங் ஏரியாவும்.
survival-bunkers-20121220-02

கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள தரையடி ஆடம்பர இருப்பிடத்தில், உள்ள ஏர் பியூரிஃபிகேஷன் சிஸ்டம். இது, உள்ளே சுவாசிக்கும் காற்றை சுத்தப்படுத்தி, பிரெஷ் காற்றை உள்ளே சர்க்குலேட் செய்கிறது.
survival-bunkers-20121220-03

கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள தரையடி சாதாரண இருப்பிடம். இதுதான், அளவில் மிகச் சிறிய, விலை குறைந்த மாடல். மொத்தப் பரப்பளவு, 500 சதுர அடிகள். 50 அடி நீளமும், 10 அடி விட்டமும் உடைய சாதா ஷெல்டரிலேயே, தரையில் ஹார்ட்-வூட் ஃபுளோர் உள்ளதை கவனியுங்கள்.
survival-bunkers-20121220-04

கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள தரையடி ஆடம்பர இருப்பிடத்தில், பெட்ரூம். இது டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ஆர்டர் கொடுத்த ஒருவருக்காக தயாரிக்கப்பட்டு என்பதால், தலையணி மற்றும் பெட் கவர்களில் இருப்பது டெக்சாஸ் மாநில கொடி!
survival-bunkers-20121220-05

கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள தரையடி ஆடம்பர இருப்பிடத்தில், என்டர்டெயின்மென்ட் ரூம். வெளியே என்ன பேரழிவு நடந்தாலும், தரையடியே இந்த என்டர்டெயின்மென்ட் ரூமில் இருந்து ஹாயாக, பவர் ஸ்டார் படம் பார்த்து மகிழலாம்.
survival-bunkers-20121220-06

மைக்கப்பட்டுள்ள தரையடி ஆடம்பர இருப்பிடம், தரைக்கு அடியே பதிக்கப்படும் காட்சி. இருப்பிடத்தின் மேல் பகுதி, தரைமட்டத்தில் இருந்து 20 அடி ஆழத்தில் புதைக்கப்படுகிறது.
survival-bunkers-20121220-07

கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள தரையடி ஆடம்பர இருப்பிடத்தில், அபாய நேரத்திலும் லெதர் சோபா வசதியுடன் வாழ வசதி.
survival-bunkers-20121220-08

கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் டிஸ்பிளேயில் வைக்கப்பட்டுள்ள மிகமிக சாதாரண தரையடி இருப்பிடம், டிஸ்பிளேயில் உள்ளது. இதற்கு உள்ளே பெரிதாக வசதிகள் கிடையாது. அளவும் சிறியது.
survival-bunkers-20121220-09

கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள தரையடி சாதாரண இருப்பிடத்தின் உட் பக்கத்தில், ஆடம்பர இருப்பிடத்தில் உள்ளது போல இடவசதி இல்லாமல் இருப்பதை காணலாம்.
survival-bunkers-20121220-10

கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள தரையடி மீடியம் சைஸ் இருப்பிடத்தில், மினி பிரிஜ், மற்றும் மீடியம் சைஸ் மைக்ரோவேவ்.
survival-bunkers-20121220-11

கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள தரையடி மீடியம் சைஸ் இருப்பிடத்தின் உட்பகுதி, studio apartment பாணியில் அமைக்கப்பட்டுள்ளதை காணலாம்.
survival-bunkers-20121220-12


கீழேயுள்ள போட்டோவில், கலிபோர்னியா, மொன்டபெல்லோவில் அமைக்கப்பட்டுள்ள தரையடி ஆடம்பர இருப்பிடத்தில், இதுவும் ஒரு ஹைலைட் வசதி. தரைக்கு மேலே என்ன நடக்கிறது என்பதை பார்க்க, CCTV வசதி. தரைக்கு மேலே 4 கேமராக்கள் பொருத்தப்பட்டு, வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை உள்ளே இருந்து லைவ்வாக பார்க்கலாம்.
survival-bunkers-20121220-13

 
Top