இன்றைய நவீன உலகில் அனைத்துமே மிகவும் அழகாகவும், வித்தியாசமாகவும்
உள்ளது. மேலும் இந்த மாதிரியான வித்தியாசத்தை பார்க்கும் போது இப்படியும்
உள்ளதா என்று பலர் கேட்கும் வகையில் பல தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்தகையவற்றில் ஒன்று தான் அறை வெப்பமூட்டி. என்ன புதிதாக இருக்கிறதா? ஆம்,
குளிர்காலத்தில் வீட்டில் கூட இருக்க முடியாத வகையில் குளிரானது நடுங்க
வைத்துவிடும். தரையில் கூட காலை வைக்க முடியாது, அந்த அளவில் தரையே அவ்வளவு
குளிர்ச்சியுடன் இருக்கும். எனவே அந்த குளிர்ச்சியை கட்டுப்படுத்தும்
வகையில் எவ்வளவு தான் மின்சார வெப்பமூட்டி வந்தாலும், இயற்கையாக விறகை
வைத்து அப்போது உண்டாகும் வெப்பத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை.
ஆனால், அதுப் போன்று விறகை வைத்து வீட்டிலேயே இயற்கையான
வெப்பமூட்டிகளை செய்வதற்கு பல நவீன டிசைன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை
பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், கண்ணைக் கவரும் வகையிலும்
வடிவமைக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இந்த மாதிரியான டிசைன்கள் வீட்டை
அலங்கரிப்பதிலும் முக்கியத்துவமுடையதாக உள்ளது.
ப்பகேபினட் வெமூட்டி
இந்த மாதிரியான அறை வெப்பமூட்டி, கேபினட்டின் ஒரு பகுதியில் இருப்பது போல், அழகாகவும், பார்ப்பதற்கே வித்தயாசமானதாகவும் இருக்கும்.
ஏசி போன்ற வெப்பமூட்டி
இந்த டிசைனானது, எப்படி ஏசி குளிர்ச்சியை வெளிப்படுத்துகிறதோ, அதேப்போன்று
இது வெப்பத்தை வெளிப்படுத்தும். மேலும் இந்த வெப்பமூட்டியானது அறைக்கு
சரியான அளவில் வெப்பத்தை பரப்பும்.
விண்டேஜ் வெப்பமூட்டி
பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இது விண்டேஜ் வெப்பமூட்டியாக இருக்கலாம். மேலும் இந்த வெப்பமூட்டி, நவீன புகைக் கூண்டுகளைக் கொண்டது.
சிறிய வெப்பமூட்டி
இந்த வடிவ வெப்பமூட்டி பார்ப்பதற்கு ஒரு பொம்மைப் போல், சுவற்றில் அழகாகப், புகைக்கூண்டுகளுடன் பொருத்தப்பட்டிருக்கும்.
கிச்சன் வெப்பமூட்டி
இந்த வெப்பமூட்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எப்படியெனில் இது
சமையலறையில் பொருத்தப்பட்டிருப்பதோடு, கெண்டி (Kettle) என்னும் ஒரு வகையான
பாத்திரத்தை வெப்பப்படுத்த முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாடிப்படி அடியில்
இந்த வடிவ வெப்பமூட்டி மாடிப்படியின் அடியில் உள்ள இடமானது வீணாகாமல், அங்கு பொருத்தப்படும் வகையில் செய்யப்பட்டுள்ளது.