பிசியோதெரபி படிக்கும் நான், கல்லூரியின் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறேன். எங்கள் அறையில், என்னையும் சேர்த்து நான்கு பெண்கள். எங்களில் ஒருத்தி, ஒல்லியாக, உயரமாக, கவர்ச்சியாக இருப்பாள். அவளின் பேரழகு மீது, எங்களுக்கு பொறாமை உண்டு. அவள் குளித்துவிட்டு வந்து, உடை மாற்றினாள். அப்போது, அவளது இரு அக்குள் பகுதியை பார்த்து அருவருப்படைந்தேன். காரணம், அவளது இரு அக்குள்களும் கறுப்படிந்திருந்தன. அக்குள் கறுப்பு விரிவடைந்து, அக்குளுக்கு வெளியே விகாரம் காட்டியது.

எதனால் என வினவியபோது தான் தெரிந்தது, கடந்த ஐந்து ஆண்டுகளாக, டியோடரன்ட்களை பயன்படுத்தி இருக்கிறாள் என்றும். அதனால், ஸ்கின் அலர்ஜி ஆகியிருக்கிறது என்றும். டியோடரன்ட்களை நிறுத்த சொல்லி, தினம் குளிக்கும் போது அக்குள், முன்னங்கழுத்து, பின்னங்கழுத்து முகம் போன்ற பகுதிகளை பாசிபருப்பு மாவு தடவி, தேய்த்து, குளிக்கச் சொன்னேன். இப்போது, அவளின் அக்குள் கறுப்பு வெகுவாய் குறைந்திருக்கிறது.
சகோதரிகளே... டியோடரன்ட்களை தவிருங்கள். உபயோகிக்கும் கட்டாயம் என்றால், 45 செ.மீ., தூரத்தில் வைத்து, ஸ்ப்ரே செய்யுங்கள்.
 
Top