பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் கரும்பும் அதிக
அளவில் கடைகளில் விற்கப்படுகிறது. கரும்பை பார்க்கும் போதே நா ஊற
ஆரம்பிக்கும். ஆனால் அதை வாங்கி சாப்பிடலாம் என்று நினைக்கும் போது, உடலில்
உள்ள நோய்கள் கண் முன் வந்து நிற்கும். ஏனெனில் மார்கழி மாதத்தில் சிலர்
அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, கோவிலுக்கு சென்று வருவர். மார்கழி
மாதம் பொதுவாக பனி பொழியும். அதனால் சிலருக்கு காய்ச்சல், சளி, இருமல்
போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆகவே என்ன தான் நாக்கு
ஊறினாலும், வீட்டில் உள்ளோர் கரும்பை சாப்பிட விட மாட்டார்கள்.
உண்மையில் கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!
உண்மையில் கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது தான் கரும்பு மிகவும் விலை மலிவாக கிடைக்கும். இந்த நாட்களில் கரும்பை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். இப்போது கரும்பை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைப் பார்ப்போமா!!!
மஞ்சள் காமாலை
கரும்பு
சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள்
நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில்
காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும்.
அதுமட்டுமின்றி மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில்
அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள்
காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன்
எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
தொற்றுநோய்கள்
உடலில்
உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல
இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும்.
இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை
சரியாகிவிடும்.
சிறுநீரக கற்கள்
கரும்பின்
நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது
தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும்.
அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள்
அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும்.
எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள்
எளிதில் உடைந்து கரைந்துவிடும்.
நீரிழிவு
கரும்பு
இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால்
உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை
சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை
நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.
ஊட்டச்சத்துக்கள்
கரும்பில்
வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ்,
இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக
அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை
ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
சளி, இருமல் மற்றும் தொண்டை வலி
நிறைய
பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம்
சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான
எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது
கரும்பு தான்.
புற்றுநோய்
கரும்பில்
இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும்
தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய்
போன்றவற்றிற்கு சிறந்தது.
நீர் வறட்சி
நிறைய
மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே
அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை
குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே
உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது
நல்லது.