இது உடலின் குருதிச் சுற்றோட்டத்திலேயே தங்கி உள்ளது. உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் குருதி ஒரு குறிப்பிட்ட விகிதத்திலேயே செல்கிறது. ஆனால் நாம் உணவு உட்கொண்டதும் இந்த விகிதம் மாறுபடுகிறது. நாம் உணவு உட்கொண்டதும் இரைப்பையின் தொழிற்பாடு துரிதமடைவதால் , அந்தப் பகுதிக்கு குருதி அதிகம் தேவைப்படுகிறது.

ஆகையால் மூளைக்குச் செல்லும் குருதியின் அளவு குறைவடைகிறது.  இதனால் மூளையின் செயற்பாட்டுத் திறனும் குறைவடையும். இதனாலேயே உணவு உட்கொண்டதும் ஒரு வித மந்த நிலை ஏற்படுகிறது.உணவு உட்கொண்டதும் தூக்கம் வர இதுவே காரணம்.
 
Top