அழுத்தப்பட்ட வாயு மற்றும் பெட்ரோலில் இயங்கும் புதிய ஹைபிரிட் காரை
பீஜோ வடிவமைத்துள்ளது. ஹைபிரிட் ஏர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார்
லிட்டருக்கு 50கிமீ மைலேஜ் தரும் என பீஜோ தெரிவித்துள்ளது.
கான்செப்ட்
நிலையிலிருக்கும் இந்த காரை உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்வதற்கான
பணிகளில் தற்போது பீஜோ தீவிரமாக இறங்கியிருக்கிறது.
அதிக மைலேஜ் தருவதற்கும், வாயுவில் இயங்கும்போது பிக்கப் கிடைப்பதற்கும்
பல்வேறு எடைக் குறைப்பு சமாச்சாரங்களை பீஜோ செய்துள்ளது. டாடா நிறுவனமும்
இதுபோன்ற வாயுவில் இயங்கும் காரை வடிவமைதத்து சோதனை நடத்தி வரும் நிலையில்
பீஜோ தனது ஹைபிரிட் ஏர் காரை விரைவில் உற்பத்தி நிலைக்கு கொண்டு செல்ல
உள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்லைடரில் கூடுதல் விபரங்களை காணலாம்.
ஹைபிரிட் நுட்பம் கொண்ட எஞ்சின்
அழுத்தப்பட்ட வாயுவிலும், பெட்ரோலிலும் செல்லும் வகையில் இந்த காரின்
பெட்ரோல் எஞ்சினில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுனரின் விருப்பதற்கு
ஏற்ப பெட்ரோல் மற்றும் வாயுவில் செல்லும் வகையில் மாற்றிக் கொள்ளலாம்.
வேகம்
வாயுவில் இயங்கும்போது இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 70 கிமீ வேகம் வரை
செல்லும். இதற்கு மேல் கூடுதல் வேகத்தில் செல்ல சுவிட்ச் மூலம்
பெட்ரோலுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
நோ டென்ஷன்
அழுத்தப்பட்ட வாயுவை நிரப்புவதற்காக 2 சிலிண்டர்கள் காருக்கு கீழே
பொருத்தப்பட்டிருக்கிறது. ஒன்று சேஸிலும் மற்றொரு பின்புற வீல்களுக்கு
இடையிலும் பொருத்தப்பட்டுள்ளன.
எமர்ஜென்சி சிலிண்டர்
பின்புற சக்கரத்திற்கு இடையில் பொருத்தப்பட்டிருக்கும் சிலிண்டரில்
இருக்கும் வாயுவை எரிபொருள் தீர்ந்து விட்டால் அவசரத்திற்கு
பயன்படுத்தலாம்.
பவர் ஆப்ஷன்
வேகத்துக்கு தக்கவாறு எரிபொருளை மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது.
எரிபொருள் சேமிப்பு
குறைந்த வேகத்தில் செல்லும்போது பெட்ரோல் எஞ்சினை அணைத்துவிட்டால் வாயுவில்
செல்லும். இதனால், அதிக எரிபொருள் சேமிப்பை பெற முடியும்.
நகர்ப்புற பயன்பாடு
நகர்ப்புறத்தில் பயன்படுத்தும் போது முழுக்க முழுக்க வாயுவில் இயங்கும்
வகையில் இந்த கார் டிசைன் செய்யப்பட்டிருப்பதாக பீஜோ தெரிவித்துள்ளது.
குறைந்த சப்தம்
வாயுவில் செல்லும்போது இந்த கார் சப்தமில்லாமல் செல்வதோடு, ஓட்டுவதற்கும் ஸ்மூத்தாக இருக்கும்.
கேபின் வடிவமைப்பு
காருக்குள் சப்தம் வராதவாறு பிரத்யேக சப்த தடுப்பு வசதிகளுடன் இந்த காரை உருவாக்கியிருக்கிறது பீஜோ.
பெட்ரோலிலும் சிக்கனம்
பெட்ரோலில் இயங்கும்போது கூட இந்த கார் பிற கார்களைவிட அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என பீஜோ தெரிவித்துள்ளது.
சுற்றுச் சூழலுக்கு உகந்த கார்
வாயுவில் இயங்கும்போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது.
இருக்கை வசதி
இந்த காரில் 4 பேர் அமர்ந்து செல்லலாம்.
கருத்துரையிடுக Facebook Disqus