0

நம்ம பல பேருக்கு தெரியாது..

அந்த நாள் – ஜனவரி 23

நம்ம நேதாஜியை ஜெர்மனிய வரலாறு “உயர்ந்த புரட்சி வீரன்” 
கொண்டாடுது..

ஆனா., இந்தியா..?

ஜெயித்தால் புரட்சியாளன்.., தோற்றால் தீவிரவாதி..! – இது தான் புரட்சியாளர்களுக்கு கிடைக்கும் பரிசு..

” சுதந்திரம் ” அகிம்சை வழியில் வந்ததால் நேதாஜியின் புரட்சி வழி தப்புங்கிற மாதிரியே ஒரு மாயை உருவாக்கிட்டாங்க..
 
கட்டபொம்மனும்., மருது சகோத ரர்களும் செய்தது சரின்னா..
பிடல் காஸ்ட்ரோவும்., சேகுவே ராவும் செய்தது சரின்னா..,
நேதாஜி செய்தது மட்டும் எப்படி தப்பாகும் ..?

நேதாஜி பிரிடிஷ்காரனை எதிர்த் தார். கூடவே அகிம்சையையும் எதிர்த்தார்..,

“சுதந்திரம்” என்பது பிச்சை கேட்பதில்லை .., நாமே எடுத்துக் கொள் வது என்றார்.

மக்கள் சக்தியை வீணடிக்கிறார் என்று காந்திஜி மீதுகூட அவருக்கு கோபம் இருந்தது..

உங்க வீட்டுல யாரோ வந்து., உங்களையே அடாவடி., அதிகாரம் பண்ணினா.. நீங்க என்ன பண்ணுவீங்க..?

 
* வெளிய போங்கன்னு..! ” உண்ணா விரதம் இருப்பீங்களா..?
- இல்ல.., 

*நாலு தட்டு, தட்டி துரத்துவீங்களா ..?

முன்னது காந்தி வழி., அடுத்தது நேதாஜி வழி.. இப்போ நீங்களே முடிவு பண்ணுங்க..!

“நேதாஜி” – இந்த உயர்ந்த தலைவனை பற்றி ஒரு பதிவில் எழுதி விட முடியாது.. ஆனா., ஒரு புத்தகத்தை மட்டும் பரிந்துரை செய்ய முடியும்.

 
” நேதாஜி – ஆதனூர் சோழன், நக்கீரன் பதிப்பகம் “
புத்தகத்தை படிச்சவுடனே மனசு வலிக்கிறதையும்., நரம்புகள் துடிக் கிறதையும் உங்களால தடுக்கவே முடியாது..

இது நாள் வரைக்கும் நேதாஜி பத்தி தெரியாதது தப்பில்ல.., – ஆனா.. இனிமேலும் தெரிஞ்ச்சி க்காம இருக்கிறது ரொம்ப தப்பு..!

கருத்துரையிடுக Disqus

 
Top