![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgek1xk0HvE6udeYjThLBAlv8BN-WVnxQCgJe0OeSo2tf0Gf3iBgNXffZ1BDUmGJxYENFXb0uL-19vzrnZIfoI9GIPQMrWj7ZEJORDBnwBbLFJ-1xv52h-cKiU6WmJ1cwYYHpz6BPWKtbxD/s400/sshot4e76bf160b9cb.jpg)
வடிவமைப்பு (format) எதுவும்
செய்யாமல் ஏற்கனவே விண்டோஸ் 7 நிறுவி உள்ள ஒரு கணணிக்கு புதிதாக வெளியான
விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவ ஆசைப்படுகின்றீர்களா? அதற்கு இலகுவான
ஒரு வழி உங்கள் கணணிக்கு Dual-Boot அமைத்து இரு ஒபெரடிங் சிஸ்டங்களையும்
ஒரே கணணியில் நிறுவி பயன்படுத்தலாம்.
எவ்வாறு விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களுக்கு Dual-Boot அமைப்பது என்று இனி பார்ப்போம்.
விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டம் பயன்படுத்தும் 60 GB நிலைவட்டு (Hard Disk) இடத்தில் தர்க்கரீதியாக 20 GB இடத்தை விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவ பயபடுத்தி கொள்ளலாம். அதற்கு நிலைவட்டில் புதிய பகிர்வை (Partition) உருவாக்குதல் வேண்டும். இதை Disk management MMC snap -in உதவியோடு உருவாக்கி கொள்ளலாம். Windows + R யை அழுத்தி Run பாக்ஸ்யை திறந்து, அங்கே diskmgmt.msc என்று குறியுங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyQl-NWHznSyQ-9ElYwEjQquYhJawULpE5yL5ciUu-fW5h0hLz_ql5xc5iYWcH7mrn0Dv-1IFdkEhyphenhyphenFrMCKwDsaKUSeFiUeA7rl8FYvRyb_N1EqJNToVo21PCK1pgYyFF1ra45nggKtLxg/s1600/runbox.png)
தொடர்ந்து Enter யை அழுத்துங்கள் அல்லது OK என்பதை கிளிக் செய்யுங்கள். அதை தொடர்ந்து MMC ஆனது Disk management snap -in உடன் இயங்கும், அங்கே உங்கள் நிலைவட்டின் உடைய ஒரு கண்ணோட்டத்தை பார்ப்பீர்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHFgqW85y-D-6HFBbNQEbLAygxHtG9DffT-yDyjklhyphenhyphenoPdl8QijuPDYUztdJOMgxca5NthzIeY_vPikrvUUdUFrgwvsxRd1u958B9lkdo-E0P4sNTM0vJatXnOyyBstotXwkD0ncizGPtK/s400/harddrives-overview.png)
தொடர்ந்து, உங்கள் கணணி C: டிரைவ்வுக்கு shrink அமைப்பதன் மூலம் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்துக்கு நிறுவ தேவையான கொள்ளளவை (Capacity) உருவாக்கி கொள்ளுதல் வேண்டும். shrink அமைப்பதற்கு நிலைவட்டில் காணப்படும் C: டிரைவ்வில் ரைட் கிளிக் செய்து, அதில் "shrink Volume" என்பதை தெரிவு செய்துகொள்ளுதல் வேண்டும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7RQg5R8lWf2BCSaJRpirVxLnqlwfwuiwhwdLT6sgOqLOLZfFy31u5mr6cxKkaMPJzd27zzsIOMWa2KUaum9_0lDu0IBZNbn0DlXG_F_ZetOnCgO6L71EiggNn9z0J1GxfHCXlCWaBmBdi/s400/shrinks-volume.png)
அதை தொடர்ந்து C: டிரைவ்வுக்கு நீங்கள் எவ்வளவு megabytes யில் shrink அமைக்க போகின்றீர்கள் என்ற தகவல் பெட்டி (Dialog Box) தோன்றும். இங்கே 1024 megabytes ஒரு gigabytes யை குறிக்கும், ஆகவே உங்களுக்கு தேவையான 20 GB அமைத்துக்கொள்ள 20480 megabytes தேவைப்படும். (20 * 1024 = 20480 megabytes)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQcv_TewPeppUby6zYZK44Ep_4_79ZiydYBDQJy-66OA00binQPpDcMsJwokQ-0olCY_nb0S13qEQlxmD-Wo_avpfhHjJJHq0UxLry2Y4lGx53tCJWl490jO1pGddhyEHzAPTEbhyphenhyphengGC3b/s1600/shrink-megabytes.png)
பின்னர் கிழே காணப்படும் shrink பொத்தானை அழுத்துவதன் மூலம் விண்டோஸ் உங்கள் C: டிரைவ் வை shrink செய்துகொள்ளும். shrinking ஆனது உங்களுடைய C: டிரைவ் வின் பகிர்வை (Partition) முடித்த பின்பு, Disk Management ஆனது புதிய இடத்துடம் empty Partition னாக தோன்றும். அந்த புதிய டிரைவ் வை file system த்துடன் format செய்வதற்கு, கறுத்த இடத்தில் ரைட் கிளிக் செய்து அங்கே "New Simple Volume " என்பதை தெரிவு செய்க.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJKr_VGF1H1BvG8iKexhlojeeLTTtAjWVTBdChTSpY9Vh6SOLHmBO8fCX3sikElHQJWMBXJ82S_bmdO4wEtuj6-IjmHT5MRm-zpkewwhJaPQI8oq6qBRTq3M1BwSe3w8snMxLZcXwfMQAG/s400/new-simple-volume.png)
அடுத்து, குறித்த டிரைவ் வை format செய்வதற்கான படிமுறைகளுடன் ஒரு wizard தோன்றும். பின்னர் அங்கே simple volume space யில் காட்டப்படும் எண்ணையே (20479) மாற்றங்கள் எதுவும் செய்யாமல் "Next " யை அழுத்துங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo8es4aUthlsXr-twPPhtlHQ_XV_Xj6Rhawm1qYuX_BK06AgjyrfNvso8AZTNfLzu_RaqZtd1r5IcW47pwyKd_68OtJ0stvGdaRJfvoySvmeeP6HTzb_ozu0zG611p_ACm69jeeRIhLPRM/s1600/volumespace.png)
அடுத்த தோன்றும் தகவலில் குறித்த டிரைவ் வுக்கான ஒரு letter அமைத்து, "Next " யை அழுத்தி செய்கையை தொடருங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1OrX6oDS3sAEwyTsy0JnX7j6JNSrKKliGRSGVcuMTrBMHM9XXuaSJy0YF3SnfSrFPxceJfq-d_4_V8gzqT5gDBHQElmNJIRWF0BOIjcx01ExtmnXbb-lN7ehuACEEw_CdXmZCLfeoCKFp/s1600/drive-letter.png)
அடுத்து தோன்றும் format படிமுறை திரையில் volume lable
என்பதில் மட்டும் உங்களுக்குவிண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவுவதன் போது
இலகுவாக ஞாபகம் வரக்கூடியவாரு மாற்றம் ஏற்படுத்தி மற்றவைகளை அப்படியே
உள்ளவாறு விட்டுவிடுங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSUJ7aR0TX0kTNe4Au7DOyCoxAcVNr2fzcwuVDiuroXM3xIfltXkZ8tipDZKWy3LGE6A2XV6k3yPh-csoUT3mor1s9oe34eiD3Z18dmSrAp34dyXOH2D64TSgxpECUtvOH88v2PyYZ0-sT/s1600/volume-lable.png)
பின்னர், "Next " யை கிளிக் செய்து format படிமுறைகளை முடித்து விடுங்கள். கருப்பு header
ஆக காட்டப்பட்ட டிரைவ் இப்பொழுது நீல நிறத்தில் காணப்படும். இனி உங்கள்
கணணிக்கு விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவல் செய்முறையை நீங்கள்
ஆரம்பிக்கலாம்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHwEvynRflZNkZizRxdC3oZQggQTQEc_80SvFLG51kTIyBP8HfETuF5HbXK7LjEI74lgUibQpjbrq_GBrHK7fIayIhKG281WKacUZXL_Uv-TK5t529QwjmgsjPsaPX5ziSYtjgLry367k8/s400/formatcomplete.png)
விண்டோஸ் 7 உள்ள கணணிக்கு விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவுதல்
முதலில் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை தரவிறக்க இங்கே கிளிக் செய்து விண்டோஸ் 8 ஒரு நகலெடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தரவிறக்கிய ISO விண்டோஸ் 8 நகலை DVD ஒன்றில் burn செய்துகொள்ளுங்கள் அல்லது bootable USB உருவாக்க இங்கே USB Download Tools யை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இனி இலகுவாக DVD யையோ அல்லது USB யையோ device யில்
பொருத்தி பூட் செய்யுங்கள். விண்டோஸ் 8 நிறுவுவதை கட்டமைக்க "press any
key to boot from CD or DVD" என்று தோன்றும் போது உடனே விரைவாக உங்கள்
கிபோர்ட் யில் உள்ள ஏதாவது ஒரு கியை அழுத்துங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie1mxYvpzllal5WecNlgyH5da-Vew4xSl20kFJdBkMz7DKm2BL43HeGidGuSLk1PwwhyphenhyphenzPRT0ZJdBIldWsYUJA7a_zom7ZUQ8Ki3rRDRexkgzrodES0n9yAUS3bVfuQdWQoefA7X9FHVhb/s400/Dual-Boot-Demo-thumb.png)
அடுத்து உங்கள் மொழியை தெரிவு செய்த பின்னர் "Install Now " என்பதை அழுத்தி விண்டோஸ் 8 யை நிறுவதற்க்கு ஆயத்தமாகுங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhX_-UCsVG6CPqKs_IyHRCRuRIVKleFi3_NFN93SBqRUlQYyQ_8Ie09gy53V1hqy0Eq1PCLTT_9vGzwQpNoWvnAVuuANM7imIjFnLqZx1u9UyFA2pnDxykj4KgN7BryDMMIrhlSXzsrOXFW/s400/Dual-Boot-Demo-_thumb2.png)
Setup செய்கை முடிந்த பின்னர் நீங்கள் licence ஒப்பந்தத்தை ஏற்றுகொள்ள கேட்கும், அதை தெளிவாக வாசித்து அதில் உள்ள check box யை நிரப்பி "Next " யை அழுத்துங்கள். தொடர்ந்து நிறுவுதல் வகைகள் தோன்றும் அதில் "Custom " என்ற நிறுவுதல் வகையை தெரிவு செய்க.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjchsrZY64-7eCJ_T893MvQJG0lZjznuKZkGodqXDe9_KUb0P91KEPCVB7BxqLoaPcgvJL8cybJHl1CHaCJDgul-J8on5opp1l4rIop0BzcxDtDotDlhVuwZDv2IA-welVtviasFp0ps6At/s400/Dual-Boot-Demo-2011-09-15-21-36-49_thumb3.png)
அதை தொடர்ந்து நீங்கள் ஏற்கனவே செய்த partition யை சரியாக தெரிவு செய்யுங்கள். பிழையாக தெரிவு செய்தால் நிறுத்தலில் தகவல் இழப்பு ஏற்றப்படும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6E_zCOk8SNGFv9NfnbjHgNyRsCa-Cp2V3aFL2_rjQLTNv61AYlIR6F7kOBHC-EFlC9Wp6mEfehOwhk-2SOq3bqSIDID4Ok_bLezVaHFbrw_86kttUlfnBDckGNn8IhmgL1WtA5sUkeIBy/s400/Dual-Boot-Demo-2011-09-15-21-50-57_thumb.png)
சரியான partition யை தெரிவு செய்த பின்னர் "Next" யை கிளிக் செய்க, அதை தொடர்ந்து உங்கள் கணணியில் விண்டோஸ் 8 நிறுவுதல் ஆரம்பித்துவிடும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLdrmZM9tk6jWEMvEJwNljI0CBfYfAevTAmJ6N4rsn5AJVZgt1VyVrSdl3XTrI0cMsJjLyZ0EEYniX81SZRZxBNE5KX0oOZbCSEmwolpGyvtqBP3ikQJ-jQRZCp9U5F_o2UNN4ksLCn5WM/s400/Dual-Boot-Demo-2011-09-15-21-53-31_thumb.png)
நிறுவுதல் செய்முறை முடிந்த பிற்பாடு, உங்கள் கணணிக்கு பெயர் கொடுத்து "Next" யை கிளிக் செய்யுங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijoOb-q1tSr6VEfLBEY69uxVVmv0w30kaiwZJ9OK_lruTUGF7E_avTMS9qt6HJTM0nFls8yf3mXAgMyrj91ERWgIfxc2uuXORWCKqM8e0uWgoByYnrp-JpsVlbMAkHf8Sdq3CzVhQxiY6B/s400/Dual-Boot-Demo-2011-09-15-22-04-15_thumb.png)
தொடர்ந்து தோன்றும் திரையில் Express setting அல்லது Custom யை தேர்ந்தெடுக்க கேட்கும். இங்கு நாங்கள் Express setting யை தெரிவு செய்துள்ளோம். நீங்கள் விரும்பினால் Custom யை தெரிவு செய்து உங்களது தேவைக்கேற்ப செட்டிங் பண்ணிக்கொள்ளுங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-tmLHEnARsWYL_SGVjf2Xy2Xmb1mel-jaoiXB4wkJd5zkCrNKrr5KAA7jyhA0en7lejjIdYuMy40WoeXuNSlo0kiMEyiXDKC8Kz5d4JD0oA2atmB5I7KrdYNwySM-0pcDmoMQS773aeTx/s400/Dual-Boot-Demo-2011-09-15-22-07-31_thumb.png)
அடுத்து நீங்கள் logon செய்து கொள்வதற்கு Windows Live ID பயன்படுத்த போகின்றீர்களா அல்லது local account உருவாக்க போகின்றிகளா என்று கேட்கும் . இங்கு எங்களுக்கு local account தேவைபடுவதால், கிழே உள்ள "Don’t want to log in with a Windows Live ID" என்பதை தெரிவு செய்க.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNeDXWksx2V3c-8gZKFnTr8cZxKDHKv4Kd__ASP3FrOrN4SZkJOM1kXOs3QgwhkYugIRzQCHp2wyBh3oegVJld-qdp6qxw454Q55IY9szDqYxMV6CW0ye-F4IdOgw2epXDTQ6CVCcZhfNy/s400/Dual-Boot-Demo-2011-09-15-22-12-04_thumb.png)
பின்னர் அடுத்து திறக்கும் திரையில் local account என்பதை தெரிவு செய்க
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIbi44lagi7UwvSYOO1TU9qbVVLu_pLL3Ss5sKNEFrLx3QrM38Ve_gpFM2Enl3ctkJiXFDvZ1XPZTM_k_y6jWlFz3qecZWHjWZ3APrNxT7-gIwBASDdNO87Nw8mXy0_bprLuPABlTkBRN-/s400/Dual-Boot-Demo-2011-09-15-22-31-21_thumb.png)
local account யை உருவாக்கிக்கொள்ள தேவையான தகவல்களை கொடுத்து, பின்னர் "Next" அழுத்தி logedin செய்துகொள்ளுங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimwHEICaqbcKatM_AIkpFqvrJPOH3iHXTTo9ASt7tnKsgdko3mvBZ8sJbuv09ojTJ_n-T9NNQLnM09YM-YB06F1_FKjMSLKt46i_AxzUJW74A2nGXCETXOU5Q_GTvXuKu_S-oyuhsOO8om/s400/Dual-Boot-Demo-2011-09-15-22-34-26_thumb.png)
logged in ஆன பிறகு, அங்கே கணணியை Restart கொடுத்த பின்னர்
சில வினாடிகளில் புதிய ஒபெரடிங் சிஸ்டம் தெரிவு திரையை
காண்பீர்கள். விண்டோஸ் 8 தானாகவே 30 வினாடிகளில் பூட் ஆகும். நீங்கள்
விண்டோஸ் 7 யை தானாகவே பூட் செய்ய விரும்பினால், கிழே உள்ள "Change Defaults or choose other " என்ற தெரிவை அழுத்துங்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhy1jTqTF_rC0ySosscOTPjVLHxyOlye_Gdf0XBMhDyfR2OjioeVcuc1RKq3LObutLVysL8IIkos40wqrsxTsjUza2im4SetSz12T1DP2QnnMx1ktFyLm_fIAJaFZMDmGRMnjPe_XclVId/s400/Dual-Boot-Demo-2011-09-15-22-37-59_thumb.png)
இப்பொழுது "Change Default operating system" என்பதை தெரிவு செய்க.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7FkRupgut_h4kbw2teH1obYtUpp9LshhvpujSZCYc8rLS1lHXoOW6zMXWecHqUCtZvPqvpIEPwXm-yF7U_vH_idVbe1hlmTOGTu2TiXpaUhDjn5JgjAiPZ_LyXVtkoOn9O6IVGzWiWabR/s400/Dual-Boot-Demo-2011-09-15-22-50-24_thumb.png)
இனி இறுதியாக விண்டோஸ் 7 யை தெரிவு செய்க.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA3-p9krWMQLxkV9C-qx8Vz05D-b0cCd5TgOOD1y-RpN3-NnBZwpdJDfLWlPic-PWEiddr9KM7-keXpDD0Fb4rN_gkXdYiUFp7b7rFJbf2TEI87A6pOcW5ha5FjQzXSiF6dEmJofsf7Df7/s400/Dual-Boot-Demo-2011-09-15-22-50-56_thumb2.png)
நீங்கள் உங்கள் கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot முறையில் நிறுவி விட்டீர்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus