குட்டி தோசை ஊற்றி, புதினா, கொத்தமல்லிச் சட்னி தடவினால் ‘க்ரீன் தோசை’, துருவிய கேரட் தூவினால் ‘ஆரஞ்சு தோசை’, தக்காளி அரைத்து
மிக்ஸ் செய்து ‘ரெட் தோசை’ என வெரைட்டியாகவும் சரிவிகிதச் சத்தோடும் கொடுக்கலாம். குட்டிக் குட்டி தோசை மீது பாலாடைக்கட்டி, ஆம்லெட்டை
ஸ்டஃப் செய்யலாம்.
வாழைப்பழ தோசை: இரண்டு வாழைப்பழங்களை மசித்துக் கொள்ளவும். கால் கப் அரிசி மாவு, 2 டேபிள்ஸ்பூன் மைதாவுடன் ஏலக்காய் தூள், சர்க்கரை,
நெய்யில் வறுத்த முந்திரி-திராட்சை, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து அடை பதத்துக்கு கலக்கிக் கொள்ளவும். இதை அடை, தோசை
மற்றும் இனிப்புப் பணியாரமாகவும் சுட்டு எடுக்கலாம். இதில் கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய அனைத்தும் கிடைக்கும்.
டிரை கலர் சாலட்: பச்சை காளிஃபிளவர் (புரோக்கலி) பூவை தனித்தனியாக நறுக்கி சுத்தம் செய்து, சிறிது உப்பு சேர்த்து, 5 நிமிடம் தண்ணீரில் வேக
வைத்து எடுக்கவும். குட்டிக் குட்டி பேபிகார்ன்களை தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இவற்றை வெண்ணெய் விட்டு வறுத்துக்
கொள்ளவும். கேரட்டை பொடியாக துருவிக் கொள்ளவும்.
ஒரு தட்டில் ஒரு லேயர் புரோக்கலி, ஒரு லேயர் பேபிகார்ன், ஒரு லேயர் கேரட் என பரத்தி குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கும்போது
கலர்ஃபுல்லாகவும் சரிவிகித சத்துகள் அடங்கியதாகவும் இருக்கும். இது போன்ற உணவுகளை டிபன் பாக்ஸில் கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கருத்துரையிடுக Facebook Disqus