0
என் நண்பர், தன் உடல் எடையை குறைக்க, சில நண்பர்கள் ஆலோசனையை கேட்டு, ஜிம்முக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள, 1,600 ரூபாய் பணம் செலுத்தி உள்ளார். காலை 5:00 மணிக்கே பயிற்சி மேற்கொள்ள சென்றார். அங்கு இருக்கும் பல பயிற்சி எந்திரங்களில், ஆர்வக்கோளாறு காரணமாக, எதற்காக பயிற்சி என தெரியாமலே, அதிக நேரம் பயிற்சி எடுத்துள்ளார்.

இப்படி பத்து தினங்கள் தான் சென்று இருப்பார். கை, கால், உடல் வலி ஏற்பட, ஜிம்மிற்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டு, படுத்த படுக்கையாகி, பின், மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

விவரம் அறிந்து, மருத்துவமனைக்கு சென்று, நண்பரை பார்த்தேன். அப்போது தான் விஷயமே தெரிந்தது. பல பயற்சிகளை, ஒரே நாளில், மிக அதிக நேரம் செய்ததன் விளைவு மற்றும் அதே காலக் கட்டத்தில் உணவு கட்டுப்பாடு எல்லாம் சேர்ந்து, உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல், இடுப்பு பிடிப்பு, மூட்டுவலி, தசைவலி என, நண்பர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மேற்படி விபரீதத்தை, விளைவை பற்றி, மருத்துவர் சொன்ன பிறகே, நண்பர் புரிந்து கொண்டார். இது, உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு, ஒரு எச்சரிக்கை. ஜிம்மிற்கு பயிற்சி மேற்கொள்ள செல்லும் இளைஞர்கள், எதற்காக பயிற்சி எடுக்க போகிறோமோ, அந்த பயிற்சியை அளவோடு, உரிய முறையில் செய்ய வேண்டும். குறுகிய நாளிலேயே, பல பயிற்சிகளை மேற்கொண்டால், நண்பர் கதிதான். புரிகிறதா இளைஞர்களே!

கருத்துரையிடுக Disqus

 
Top