0
 Dennis Tito Proposes Ultimate Honeymoon Voyage To Mars
திருமணமான புதுமணத்தம்பதிகள் ஹனிமூன் என்ற பெயரில் சில நாட்கள் தனியாக சென்று ஜாலியாக பொழுதை கழித்துவிட்டு வருவார்கள்.
தமிழ்நாட்டில் பிறந்த நடுத்தர வர்க்கத்தினர் ஊட்டி, கொடைக்கானல் என்று போனால் ஓரளவிற்கு வசதி படைத்தவர்கள் சிம்லா, குலு மணாலி என்று போய் அசத்துவார்கள்.

அதிக வசதி படைத்த பணக்காரர்கள் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு கூட ஹனிமூன் செல்வதுண்டு. ஆனால் செவ்வாய் கிரகத்திற்கு ஹனிமூன் அழைத்துச் செல்லும் புதியதொரு சுற்றுலா திட்டத்தை தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

மிகப்பெரிய கிரகம் செவ்வாய்
மார்ஸ் எனப்படும் செந்நிற கிரகமான செவ்வாய் ரெட் பிளானட் எனப்படுகிறது. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய கிரகம். இது சூரியனில் இருந்து 4-வது இடத்தில் பூமிக்கு அடுத்ததாக காணப்படுகிறது.

உலக நாடுகளின் கவனம்
தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்தை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது. இதுபோல் பல்வேறு உலக நாடுகளும் செவ்வாய் கிரகத்தை பற்றியே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

பூமியைப் போலவே பருவநிலை
பூமியைப்போல செவ்வாய் கிரகத்திலும் மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான தண்ணீர் அதிக அளவு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் காணப்படுவது போலவே செவ்வாயிலும் பருவ நிலை சுழற்சி நிகழ்கின்றது. மலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய்கள், எரிமலைகள், பாலைவனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இரண்டு நிலாக்கள்
பூமிக்கு சந்திரன் துணைக்கோள் இருப்பதுபோல செவ்வாய் கிரகத்துக்கு போபோஸ், டெயிமோஸ் என்ற 2 துணைக் கோள்கள் உள்ளன.

அபார்ட்மென்ட் கட்டும் அமெரிக்கா
தற்போது செவ்வாயின் சுற்றுப் பாதையில் அமெரிக்காவின் 3 விண்கலங்கள் சுற்றி வருகின்றன. வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

விண்வெளி சுற்றுலா
அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் டிட்டோ என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனம் எதிர்காலத்தில் விண்வெளிக்கு மனிதன் சுற்றுலா செல்லும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்தது. இதற்கான ஒப்பந்தத்தை நாசாவுடன் இணைந்து செய்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் இது தொடங்கும் என்று அறிவித்தது.

ஹனிமூன் திட்டம் தயார்
தற்போது செவ்வாய் கிரகத்தில் தேனிலவு பயணம் செல்லும் திட்டத்தையும் அது அறிவித்துள்ளது. இதில் திருமணமான தம்பதி பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கு தேர்வு செய்யப்படும் தம்பதிக்கு விண்வெளிப்பயணம் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு செவ்வாய் கிரகத்துக்கு பயணம் தொடங்கும்.

அதிகமில்லை ரூ.5,400 கோடிதான்
ஹனிமூன் மொத்தம் 501 நாட்கள் பயணம். இதற்கான செலவு ரூ. 5,400 கோடி என்றும் இன்னும் 5 வருடத்தில் இந்த திட்டம் தொடங்கும் என்றும் அதன் அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

அடப் போங்கப்பா
இதைக் கேட்டாலே மயக்கம் வருகிறதா... கவலைப்படாதீங்க.... உங்க வீட்டு மொட்டை மாடியில் தம்பதி சகிதமாக அமர்ந்து சந்தோசமாக நிலாவைப் பாருங்கள். அதை விட ஹனிமூனுக்கு வேற எங்கயாவது போகனுமா என்ன?

கருத்துரையிடுக Disqus

 
Top