0
காலை உணவு உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் காலை உணவானது நீண்ட இடைவெளிக்குப் பின் உண்பதால், உடலில் அன்றைய நாளுக்கு தேவையான சக்தியானது , காலை உணவை உண்ட பின்பு தான் கிடைக்கிறது. ஆகவே எப்பொழுது வேண்டுமானாலும் உண்ணாமல் இருக்கலாம். ஆனால் காலையில் மட்டும் உண்ணாமல் இருக்க கூடாது.

அவ்வளவு முக்கியத்துவம் கொண்ட காலை உணவானது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், சீக்கிரம் செய்யும் வகையில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதற்காக நிறைய ரெசிபிக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் எளிமையாக செய்யும் வண்ணமும், பலருக்கும் பிடித்தது என்று சொன்னால் சாண்ட்விச். இத்தகைய சாண்ட்விச் காலை உணவாக மட்டுமின்றி, மாலையில் ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடக்கூடியது.

காளான் பன்னீர் சாண்ட்விச்

சைவ பிரியர்களுக்கு, அவைச உணவின் சுவையை கொடுக்கும் வகையில் சைவத்தில் இருக்கும் காய் தான் காளான். எனவே அத்தகைய காளான் மற்றும் பன்னீரை வைத்து சுவையான முறையில் சாண்ட்விச் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
செய்முறை

நிறைய பேருக்கு சாண்ட்விச் என்றால் மிகவும் பிடிக்கும். சிலர் அதனை காலை உணவாகவும் சாப்பிடுவார்கள். அதிலும் சாண்ட்விச்சில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் இதில் சைவம் மற்றும் அசைவம் என்று இரண்டிலுமே உள்ளன. ஆனால் சைவ பிரியர்களுக்கு, அவைச உணவின் சுவையை கொடுக்கும் வகையில் சைவத்தில் காளான் உள்ளது.

எனவே அத்தகைய காளான் மற்றும் பன்னீரை வைத்து சுவையான முறையில் சாண்ட்விச் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைக்கும். சரி, இப்போது அத்தகைய காளான் பன்னீர் சாண்ட்விச்சை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
mushroom paneer sandwich
தேவையான பொருட்கள்:

பிரட் - 6 துண்டு
காளான் - 8 (நறுக்கியது)
பன்னீர் - 100 கிராம் (துருவியது)
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (சிறியது மற்றும் நறுக்கியது)
தக்காளி - 2 (சிறியது மற்றும் நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கிராம்பு - 3
மிளகு - 6
ஓமம் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் மிளகு, சீரகம், ஓமம் மற்றும் கிராம்பு போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி இஞ்சி மற்றும் வெங்காயம் போட்டு 2 நிமிடம் நன்கு வதக்கி, அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் தக்காளி, பச்சை மிளகாய் போட்டு, 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் பன்னீர் மற்றும் காளான் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்து இறக்க வேண்டும்.

அடுத்து, பிரட்டை பொன்னிறமாக டோஸ்ட் செய்து, அதில் இந்த காளான் கலவையை வைத்து, மற்றோரு பிரட்டை அதன் மேல் வைத்து, இரண்டாக நறுக்கி பரிமாற வேண்டும்.
இப்போது சுவையான காளான் பன்னீர் சாண்ட்விச் ரெடி!!!

கருத்துரையிடுக Disqus

 
Top